
ஸ்மார்ட் போன்களுக்கு இணையாக, ஸ்மார்ட் ஸ்பீக்கர்களும் அதிகமாக அறிமுகமாகி வருகின்றன. சமீபத்திய அறிமுகம், 'போட் ஸ்டோன் 700ஏ ஸ்மார்ட் ஸ்பீக்கர்' பெயருக்கு ஏற்ற மாதிரி, பார்ப்பதற்கு கல் போல ஸ்டாராங்காக இருக்கிறது. மாசு, நீர் புகாத வடிவமைப்புடன் வந்துள்ளது. இதற்காக, 'ஐ.பி.எக்ஸ்., 6' சான்றிதழ் பெற்றுள்ளது. கீழே விழுந்தாலும் எளிதில் கீறல்கள் விழாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, வாய்ஸ் கமென்ட் வசதிக்காக, இந்த ஸ்பீக்கரில், 'அமேசான் அலெக்ஸா இன்பில்ட்' ஆக வருகிறது. போனில் போட் ஆப் பயன்படுத்தி, அலெக்ஸா மூலம் கட்டளையிடலாம்.
இந்த ஸ்பீக்கரில், இரண்டு, 5 வாட் புல் ரேஞ்ச் டிரைவர்கள் உள்ளன. 2,000 எம்.ஏ.எச்., பேட்டரி, புளுடூத், 3.5 எம்.எம்., ஆக்ஸிலரி கேபிள் ஆகியவையும் உண்டு. மைக்ரோ யு.எஸ்.பி., போர்ட் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். எல்லாவற்றையும் விட, விலையும் சாதகமாகவே இருக்கிறது.
விலை 3,199 ரூபாய்.

