PUBLISHED ON : நவ 06, 2022

'கூகுள்' நிறுவனம், ஆண்ட்ராய்டில் அதன் 'ஸ்ட்ரீட் வியூ' செயலி சேவையை, அடுத்த ஆண்டு முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
பயனர்கள், ஸ்ட்ரீட் வியூ செயலிக்குப் பதிலாக, 'கூகுள் மேப்ஸ் அல்லது ஸ்ட்ரீட் வியூ ஸ்டூடியோ' ஆகியவற்றுக்கு மாறிக்கொள்ளுமாறும்; ஸ்ட்ரீட் வியூ செயலி சேவை, 2023 மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்றும், கூகுள் அறிவித்துள்ளது.
ஸ்ட்ரீட் வியூ என்பது, 360 டிகிரி கோணத்தில், நகரத்தின் தெருக்களை நம்மால் இணையத்தில் பார்க்க முடியும். 2007ல், உலகின் பல நாடுகளில் இந்த சேவை அறிமுகம் ஆனது.
பிரத்யேக கேமராக்களால், 360 டிகிரி கோணத்தில், நகரத்தில் உள்ள எல்லா இடங்களையும் புகைப்படம் எடுத்து, அவற்றை ஒன்றாக இணைத்து, தெருக்களின் முழு பார்வையும் கிடைக்கும்படி உருவாக்கப்படும். இதனால், பயனர்கள் தாங்கள் விரும்பும் இடத்தை எளிதாக அடையாளம் காணலாம்.
