PUBLISHED ON : நவ 06, 2022

'வாட்ஸ் ஆப்' நிறுவனம், அதன் பயனர்கள், தங்களுக்கு தாங்களே 'மெசேஜ்' அனுப்பிக்கொள்ளும் வசதியை வழங்குவதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விரைவில், 'மெசேஜ் யுவர்செல்ப்' எனும் பெயரில், இந்த சேவை அறிமுகம் ஆக உள்ளது.
இதை பயன்படுத்தி, நமக்கு நாமே தரவுகளை அனுப்பிக் கொள்ள முடியும்.
இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், நமது வாட்ஸ் ஆப் 'கான்டாக்ட்ஸ் லிஸ்ட்'டில் நம் தொலைபேசி எண்ணும் இருக்கும்.
அதை பயன்படுத்தி, தரவுகளை அனுப்பலாம்.
இந்த சேவையை பயன்படுத்தி, முக்கியமான பல தரவுகளை நாமே நமக்கு அனுப்பி, எளிதாக அணுகும் வகையில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள முடியும்.
வாட்ஸ் ஆப் மேலும் பல வசதிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அவற்றில் சில: வீடியோ, ஆடியோ தொலைபேசி அழைப்புகளில், 32 பேர் வரை இணைப்பில் சேர்த்துக் கொள்ள முடியும்
2 ஜி.பி., அளவிலான பைல்களை எளிதாக அனுப்ப முடியும்
ஒரு குழுவில் 1,024 பேர் வரை இணைக்க முடியும்
செய்திகளை 5,000 நபர்கள் வரை அனுப்ப முடியும்
