தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/சிலர் இன்னும் 'பிளாப்பி' பயன்படுத்துவது ஏன்?

சிலர் இன்னும் 'பிளாப்பி' பயன்படுத்துவது ஏன்?

சிலர் இன்னும் 'பிளாப்பி' பயன்படுத்துவது ஏன்?


PUBLISHED ON : நவ 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த 'டிஜிட்டல்' யுகத்தில், தொழில்நுட்பம் மேம்பட மேம்பட, சில மின்னணு சம்பந்தமான சாதனங்கள் வழக்கொழிந்து போய்விடுகின்றன.

பல சாதனங்கள் இந்த தலைமுறை அறியாதவை. அவற்றில் ஒன்று, முன்னர் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் 'பிளாப்பி' டிஸ்குகள். தரவுகளை சேமிக்க, 'காம்பாக்ட் டிஸ்க், பென்டிரைவ்' போன்றவை அறிமுகம் ஆகும் முன், இவை பெரிதும் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், தற்போதைய கம்ப்யூட்டர், லேப்டாப்புகளில் இவற்றை பயன்படுத்த வசதிகள் கிடையாது.

இதில் ஆச்சரியமான விஷயம், இப்போதும் இந்த பிளாப்பிகளுக்கான தேவை இருக்கிறது என்பது தான்.

வெகு சிலர், தங்களுடைய தரவுகளை சேமிக்க, இன்னும் இந்த பிளாப்பிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

காரணம், இதில் இருக்கும் தரவுகளை, இன்று யாரும் எளிதில் திருடி விட முடியாது என்பதால் தான்.

தற்போது கம்ப்யூட்டர்களில் பிளாப்பிகளை பயன்படுத்த வசதியாக, தனியாக 'டிரைவ்' கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி; பழைய பிளாப்பிகளை வாங்கி, ரீசைக்கிள் செய்து தரும் வணிகத்திலும் ஒரு சிலர் ஈடுபட்டுவருகின்றனர்.

தரவு திருட்டு என்பது அதிகமாகிவிட்ட நிலையில், அமெரிக்க அரசு இன்னும் 'பேக்ஸ்' மிஷினை நம்புகிறது. ஜப்பானில் பல முக்கியஸ்தர்கள், முக்கியமான தரவுகளை சேமிக்க, இன்னும் பிளாப்பிகளையே பயன்படுத்துகின்றனர்.

பழசாகிப் போனாலும், அவற்றாலும் பயன் இருக்கத் தான் செய்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us