PUBLISHED ON : மார் 05, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஸ்டப்கூல்' நிறுவனம் 20 ஆயிரம் எம்.ஏ.எச்., திறன் கொண்ட புதிய 'பவர்பேங்க்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
'சூப்பர்பவர் 85 வாட் பவர் பேங்க்' எனும் பெயரில் அறிமுகம் ஆகியுள்ள இந்த பவர் பேங்க் வாயிலாக, எந்த ஒரு ஐபோனையும் 30 நிமிடங்களில், 50 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ள இயலும். இதில், 'டைப் சி, டைப் சி 1, டைப் சி 2' போர்ட்டுகள் இடம்பெற்றுள்ளன.
'லேப்டாப், மேக்புக்' போன்றவற்றை, டைப் சி போர்ட் வாயிலாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். டைப் சி 1 போர்ட் வாயிலாக, 65 வாட் பவருடன் அனைத்து வித போன்களையும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். டைப்சி 2 போர்ட் வாயிலாக 20 வாட் பவருடன் ஐ.ஓ.எஸ்., சாதனங்களை சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.
விலை:ரூ.4990

