'சூப்பர் குவாலிட்டி' படங்களை இனி 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பலாம்
'சூப்பர் குவாலிட்டி' படங்களை இனி 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பலாம்
PUBLISHED ON : ஜன 29, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழக்கமாக, 'வாட்ஸ்ஆப்' வாயிலாக, நாம் போட்டோ மற்றும் படங்களை அனுப்பும்போது, அவற்றை 'ஒரிஜினல் குவாலிட்டி' உடன் அனுப்ப முடிவதில்லை.
காரணம், வாட்ஸ்ஆப் செயலியே நாம் அனுப்பும் படங்களை, 'கம்ப்ரஸ்' செய்து அனுப்பிவிடும் என்பது தான்.
தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை அதே தரத்தில் அனுப்ப முடியாதது, வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு ஒரு குறையாகவே இருந்து வந்தது. இப்போது இந்த குறையை சரிசெய்யும் முயற்சியில் வாட்ஸ் ஆப் இறங்கி உள்ளது. இதற்காக, புதிய வசதி வழங்கப்பட உள்ளது.
இதன்படி, நாம் அனுப்பும் படத்தை எவ்வளவு துல்லியமாக அனுப்ப விரும்புகிறோமோ அதை, 'செட்டிங்ஸ்' பகுதிக்குச் சென்று தேர்வு செய்து அனுப்பலாம்.
இந்த வசதி, முதற்கட்டமாக, 'ஆண்ட்ராய்டு' போன்களில் மட்டும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

