உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 06, 2022

அ நிறம் | அளவு
எச்.பி., நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பரில், 11 அங்குல டேப்லெட்டை அறிமுகம் செய்தது. அதன் பின், இப்போது சுழலும் கேமராவுடன் கூடிய, 11 அங்குல டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.
இதில், 'இன்டெல் பெண்டியம் சில்வர் என்.6000 பிராசஸர்' உள்ளது. இந்த டேப்லெட்டை பிசிக்கல் கீபோர்டு உடனும், அது இல்லாமலும் வாங்கிக் கொள்ளலாம். 4ஜி.பி., ரேம் மற்றும் 128 ஜி.பி., சேமிப்பகம் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. யு.எஸ்.பி., டைப் சி போர்ட், கைவிரல் ரேகை மூலம் ஆன் செய்து கொள்வதற்கான பவர் பட்டன் ஆகியவையும் இதில் உள்ளன.
தற்சமயம் இயற்கை வெள்ளி வண்ணத்தில் மட்டும் வந்துள்ளது. இந்திய சந்தையில் எப்போது அறிமுகம் ஆகிறது என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
விலை: இந்திய மதிப்பில் 37,500 ரூபாய்
