
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டில், மிக சக்தி வாய்ந்த, 3டி கேமராவுடன் கூடிய ஐபோனை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
தற்போதைய, 3டி கேமராவை, 25 முதல் 50 செ.மீ., வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில், ஆப்பிள் கேமராவை, 15 அடி துாரம் வரைக்கும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆப்பிளின் இந்த அடுத்த தலைமுறை போன் கேமராவில், லேஸர் ஸ்கேனர் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 'சோனி' நிறுவனத்தின் மூலம் இந்த கேமரா பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் பேச்சு உள்ளது.

