உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 21, 2020

அ நிறம் | அளவு
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும், 'ஐபோன் 12' அறிமுகம், செப்டம்பரில் இருந்து, அக்டோபருக்கு தள்ளி போகும் என தெரிகிறது. மேலும், விற்பனை அக்டோபர் இறுதியில் துவங்கும் என்றும் தெரிகிறது. ஆனால், 'ஐபோன் 12 புரோ' போனுக்கான மு ன்பதிவு, நவம்பரில் தான் துவங்கும் என்றும் கூறுகிறார்கள்.
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள், செப்டம்பர் மாத நிகழ்ச்சியின்போது தான் அரங்கேறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக உற்பத்தி மற்றும் வினியோகங்கள் பாதிக்கப்படுவதால், அக்டோபருக்கு தள்ளிப் போகிறது.
இருப்பினும், செப்டம்பரில், அடுத்த தலைமுறை ஆப்பிள் வாட்ச் மற்றும் புதிய ஐபேடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'ஐபோன் எஸ்.இ., 2020' போனை அறிமுகம் செய்தது போல, மிக எளிமையாக இந்த அறிமுகம் அரங்கேறலாம் என்கின்றனர்.
