தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/புதிய தலைமுறை டேப்லெட்டுகள்

புதிய தலைமுறை டேப்லெட்டுகள்

புதிய தலைமுறை டேப்லெட்டுகள்


PUBLISHED ON : மே 22, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அமேசான் பயர் 7' மற்றும் 'பயர் 7 கிட்ஸ்' என இரு புதிய தலைமுறை டேப்லெட்டுகள், அமெரிக்காவில் அறிமுகம் ஆகியுள்ளன.

இந்த இரு டேப்லெட்டுகளின் 'ரேம்' இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய தலைமுறை பயர் 7 மாடல்களை விட, 40 சதவீதம் அதிகம் பேட்டரி ஆயுள் கொண்டதாகவும், இந்த புதிய தலைமுறை டேப்லெட்டுகள் வந்துள்ளன.

இவை, 7அங்குல திரை மற்றும் 1,200x600 பிக்சல் துல்லியம் கொண்டதாகும். மேலும் 2 ஜி.பி., ரேம், 16 ஜி.பி., மற்றும் 32 ஜி.பி., சேமிப்பகம் உள்ளது. தேவை எனில், ஒரு டி.பி., அளவுக்கு, 'மைக்ரோ எஸ்டி சிலாட்' வாயிலாக அதிகரித்துக் கொள்ள முடியும்.

பேட்டரியை பொறுத்தவரை, சாதாரண பயன்பாட்டில் 10 மணி நேரம் வரை உபயோகிக்கலாம். மேலும் யு.எஸ்.பி., டைப் சி போர்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

தோராய விலை: அமேசான் பயர் 7 மாடல் 4,600 ரூபாயில் துவங்குகிறது.

அமேசான் பயர் 7 கிட்ஸ் மாடல் 7,750 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us