PUBLISHED ON : டிச 31, 2020

மடக்கும், மடிக்கும் போன்கள் எல்லாம் வந்து விட்ட நிலையில், எல்.ஜி. நிறுவனம், சுருட்டும் போனை தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த போனை, புத்தாண்டின் முதல் பாதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது, இந்நிறுவனம்.
இந்த போனுக்கு, எல்.ஜி.,ரோலபிள் அல்லது, எல்.ஜி., ஸ்லைடு என பெயரிட்டு, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியிடப்படலாம் என்ற தகவல்களும் உலவுகின்றன. இந்த போன், 7.4 அங்குலத்தில், சுருட்டும் வகையிலான திரையை கொண்டதாகவும், 16 ஜி.பி., ரேம் மற்றும், 256 ஜி.பி., சேமிப்பகமும் கொண்டதாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதன் பேட்டரி திறன், 4,200 எம்.ஏ.எச் ஆக இருக்கலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது விலை. இதன் விலை, 1.73 லட்சம் ரூபாயாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாங்கும் ஐடியா இருக்கிறதா?!
