தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/உலகின் முதல் 'சிப்'

உலகின் முதல் 'சிப்'

உலகின் முதல் 'சிப்'


PUBLISHED ON : மே 09, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப் பெரிய நிறுவனமான, ஐ.பி.எம்., புதிதாக, 'இரண்டு நானோமீட்டர் சிப்' தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உலகின் முதல், இரண்டு நானோமீட்டர் சிப் ஆகும். இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக, 5 ஆயிரம் கோடி டிரான்சிஸ்டர்களை, ஒரு விரல் நகத்தில் அடக்கிவிட முடியும்.

இந்த சிப் வாயிலாக, இன்டர்நெட்டை அணுகுவது மிகவும் வேகமாக இருக்கும். மேலும், செல்போனின் பேட்டரி நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்கும். அப்ளிகேஷன் பயன்பாடுகளிலும் வேகம் மிக அதிகமாக இருக்கும் என்கிறது, ஐ.பி.எம்., நிறுவனம். இந்த சிப்பை, லேப்டாப்பில் பயன்படுத்தும் போது, அதன் செயல்பாடுகள் விரைவாக இருக்கும்.

மேலும், ஓட்டுனர் இல்லா ஆட்டோமேட்டிக் கார்களில், இந்த சிப்பின் பயன்பாடு மிக சிறப்பாக இருக்கும். இந்த சிப்பின் வரவு, செமிகண்டக்டர் துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். இப்போது இருக்கும் மிக முன்னேறிய, '7 நானோமீட்டர் நோட் சிப்'களை விட, 45 சதவீதம் அதிக செயல்திறன், 75 சதவீதம் குறைவான பேட்டரி ஆற்றல் பயன்பாடு ஆகியவை கொண்டதாக, இந்த சிப் இருக்கும் என்கிறது, ஐ.பி.எம்., நிறுவனம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us