PUBLISHED ON : பிப் 27, 2022

அண்மையில் சாம்சங், அதன் 'கேலக்ஸி டேப் எஸ்., 8' வரிசையில் மூன்று டேப்லெட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்., 8, டேப் எஸ்.,8 பிளஸ், டேப் எஸ்.,8 அல்ட்ரா' ஆகிய டேப்லெட்டுகள் அறிமுகம் ஆகியுள்ளன.
'சாம்சங் கேலக்ஸி எஸ்., 22 சீரிஸ்' ஸ்மார்ட்போனுடன், இந்த டேப்லெட்டுகளும் அறிமுகம் ஆகின. இந்த டேப்லெட்டுகளில், கேலக்ஸி டேப் எஸ்.,8 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்., 8 பிளஸ் ஆகிய இரண்டும், இதற்கு முன் அறிமுகம் ஆன, 'கேலக்ஸி டேப் எஸ்., 7' டேப்லெட்டின் தொடர்ச்சியாகும். ஆனால், கேலக்ஸி டேப் எஸ்.,8 அல்ட்ரா முற்றிலும் புதிய தயாரிப்பாகும்.
இந்த புதிய மூன்று டேப்லெட்டுகளுமே, 5ஜி இணைப்பு வசதியுடனும் வந்துள்ளன. அது இல்லாமலும் கிடைக்கும்.
விலை:
கேலக்ஸி டேப் எஸ்., 8 வைபை மாடல் துவக்க விலை: 58,999 ரூபாய்.
5ஜி மாடல் துவக்க விலை: 70,999 ரூபாய்.
கேலக்ஸி டேப் எஸ்., 8 பிளஸ் வைபை மாடல் துவக்க விலை: 74,999 ரூபாய்.
5ஜி மாடல் துவக்க விலை: 87,999 ரூபாய்.
கேலக்ஸி டேப் எஸ்., 8 அல்ட்ரா வைபை மாடல் துவக்க விலை: 1.09 லட்சம் ரூபாய்.
5ஜி மாடல் துவக்க விலை: 1.23 லட்சம் ரூபாய்.
