உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 27, 2022

அ நிறம் | அளவு
'லாவா' நிறுவனம், 'நெக்பேண்டு ஸ்டைல்' இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'லாவா புரோபட்ஸ் என்., 3' எனும் இந்த நெக்பேண்டு ஸ்டைல் இயர்போன், ஏகப்பட்ட வசதிகளுடன் வந்துள்ளது.
குறிப்பாக, இரண்டு சாதனங்களுடன் இணைக்கும் வசதி, வேகமான சார்ஜிங், வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி ஆகியவை உள்ளன. 'குறைந்த பட்ஜெட்டில், சிறப்பான சவுண்டு' என, இந்நிறுவனம் இந்த இயர்போன் குறித்து தெரிவித்துள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒன்பது மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். நீலம் மற்றும் கறுப்பு வண்ணங்களில் வந்துள்ளன.
விலை: 999 ரூபாய்.
