உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 13, 2020

அ நிறம் | அளவு
இந்தியாவில், 4கே டிவிகளை அறிமுகம் செய்வதில் பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில், இப்போது, ஜப்பானை சேர்ந்த, தோஷிபா நிறுவனமும் இணைந்துள்ளது கியு.எல்.இ.டி., புல் அரே அல்ட்ரா எச்.டி., ஸ்மார்ட் டிவிகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
இந்த டிவிகள் வரும், 18ம் தேதி முதல் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் விற்பனைக்கு வருகின்றன. இவை ஜப்பானில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
எத்தனை மாடல்கள்; என்ன விலை என்பது போன்ற தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், தோஷிபா பெரிய அளவிலான டிவிகளையே அறிமுகம் செய்யக்கூடும் என சந்தையில் எதிர்பார்க்கப்படுகிறது.
