பேஸ்புக், டுவிட்டருக்கு எதிராக சொந்த ஊடகம் துவக்கும் டிரம்ப்
பேஸ்புக், டுவிட்டருக்கு எதிராக சொந்த ஊடகம் துவக்கும் டிரம்ப்
PUBLISHED ON : மார் 28, 2021

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், விரைவில் மீண்டும் சமூக ஊடகங்களுக்கு திரும்ப இருக்கிறார். ஆனால், இம்முறை தனக்கென சொந்தமாக ஒரு ஊடகத்தை ஏற்படுத்தி, அதில் வர இருக்கிறார்.அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலின் போது, டிரம்பின் சர்ச்சை பேச்சுகளை அடுத்து, 'டுவிட்டர்' நிறுவனம், அவருடைய கணக்கை நிரந்தரமாக நீக்கியது. மேலும் பல சமூக ஊடகங்களும் அவருக்கு தடை விதித்தன.இந்நிலையில், வேறு எந்த நிறுவனத்தையும் சார்ந்திருக்காமல், சொந்தமாக, 'டுவிட்டர், பேஸ்புக்' போல, ஒரு சமூக ஊடகத்தை துவக்கும் முடிவுக்கு அவர் வந்திருக்கிறார்.
இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறுவனத்தை துவங்கிவிடுவார் என்கிறார்கள். இருந்தாலும், இந்த விஷயத்தில் அமெரிக்கா டூ லேட்! தமிழ்நாட்டில் எல்லாம், டிவி கோலோச்சிய காலத்திலேயே, தமிழக அரசியல் தலைவர்கள் அவரவர்களுக்கு என தனியாக சேனலை ஆரம்பித்து வழிகாட்டி விட்டார்கள்.
