உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 11, 2022

அ நிறம் | அளவு
'அமேசான்' நிறுவனம், அதன் புதிய தலைமுறை 'கிண்டில்' சாதனத்தை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கிண்டில் என்பது, புத்தகங்களை வாசிக்க பயன்படும் மின்னணு சாதனமாகும்.
ஆறு அங்குல டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த கிண்டில், 11வது தலைமுறை கிண்டிலாகும்.
இதில் 16 ஜி.பி., சேமிப்பு வசதி உள்ளது. அத்துடன் சார்ஜ் செய்வதற்காக இதில் 'யு.எஸ்.பி., டைப் சி போர்ட்' வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.
இதன் பேட்டரி ஆறு வாரங்கள் வரை தாங்கும் எனக் கூறப்பட்டு உள்ளது.
இதுவரை வந்த கிண்டில்களில், இதுவே மிகவும் மெலிதான கிண்டில் என அமேசான் தெரிவித்துள்ளது.
கறுப்பு, டெனிம் என இரு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அறிமுக விலை: 8,999 ரூபாய்.
