உள்ளடக்கத்திற்கு செல்ல

பார்த்தவுடன் மறைந்துவிடும் 'வாட்ஸ் ஆப்' புதிய முயற்சி
பார்த்தவுடன் மறைந்துவிடும் 'வாட்ஸ் ஆப்' புதிய முயற்சி
PUBLISHED ON : ஜூலை 08, 2021

அ நிறம் | அளவு
'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய பரிசோதனை முயற்சியில் இறங்கி உள்ளது. நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை சம்பந்தப்பட்டவர் பார்த்ததும், அவை உடனடியாக தானாகவே மறைந்துவிடும் வசதியை வழங்கும் முயற்சியில் உள்ளது.
இந்த, 'ஒரு முறை பார்க்கும்' தொழில்நுட்ப வசதியை, தற்போது குறுகிய வட்டத்துக்குள் பரிசோதித்து வருகிறது. இந்த பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றதும், சந்தையில் அறிமுகம் ஆகும். நாம் ஒரு செய்தியை அல்லது படத்தை அனுப்பும் போது, 'ஒருமுறை பார்க்க மட்டும்' என்ற தேர்வை தேர்வு செய்து அனுப்பினால், பெறுபவர் பார்த்த அல்லது படித்தவுடன் மறைந்துவிடும்.
இதை தனிநபருக்கும் குழுக்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதி வந்த பின் என்னென்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை!
