உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 07, 2021

அ நிறம் | அளவு
'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனரான கார்ல் பை, அந்நிறுவனத்திலிருந்து விலகி, லண்டனில், 'நத்திங்' எனும் புதிய நிறுவனத்தை கடந்த ஆண்டு துவக்கினார். இப்போது, இந்நிறுவனத்திலிருந்து முதல் தயாரிப்பாக,'ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்' அறிமுகம் செய்யப்பட உள்ளது.
'நத்திங் இயர் 1 ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ், 'ஆப்பிள் ஏர்பட்ஸ்' மற்றும்'சாம்சங் கேலக்ஸி பட்ஸ்' ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த இயர்பட்ஸ், 27ம் தேதியன்று அறிமுகம் ஆகிறது.
ஒளிபுகும் வகையிலான இதன் வடிவமைப்பு, அனைவரையும் கவரும் என்கிறார்கள். இந்தியாவிலும் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. விலை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து, எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
