உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 04, 2022

அ நிறம் | அளவு
'நாய்ஸ் ஏர்பட்ஸ் 2' எனும் 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்' அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சகாயவிலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயர்பட்சின் எடையும் குறைவுதான். ஒவ்வொன்றும் 5 கிராம் எடை கொண்டது.
இதில் 5.3 புளூடூத் இணைப்பு வசதி இடம்பெற்றுள்ளது. அத்துடன், 13 மி.மீ., டிரைவர்களும் இந்த இயர்பட்சில் இடம்பெற்றுள்ளன. விரும்பும்பட்சத்தில், சுற்றுப்புற சப்தத்தை தடுக்கும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் போது, இது மிகவும் பயன்படும்.
'டச் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டென்ட்' ஆகிய வசதிகளும் உள்ளன. பேட்டரி, 40 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். கறுப்பு மற்றும் வெள்ளை என, இரு வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது.
விலை: 1,799 ரூபாய்
