உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 21, 2021

அ நிறம் | அளவு
'சாம்சங் கேலக்ஸி ஏ 33 5ஜி' போன் குறித்து பல தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வருகிறது. இந்த போனுக்கு முந்தைய மாடலான, 'சாம்சங் கேலக்ஸி ஏ 32' ஸ்மார்ட்போன், 4ஜி மற்றும் 5ஜி என இரு இணைப்பு வசதியும் கொண்டிருந்தது. ஆனால், இந்த புதிய போன், 5ஜி இணைப்பு வசதி மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இதன் பேட்டரி திறன் 5,000 எம்.ஏ.எச்., ஆக இருக்கும் என்கிறார்கள். அத்துடன், செவ்வக வடிவிலான கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அத்துடன் ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன் ஆகியவை போனின் அடிப்பகுதியிலும், 'சிம் டிரே' மேல் பகுதியிலும் இருக்கும் என தெரிகிறது. கூடவே, 3.5 மி.மீ.,ஹெட்போன் ஜேக் இருக்காது என்றும் கூறப்படுகிறது. சந்தைக்கு வந்தால் எல்லா சாயமும் வெளுத்துவிடத் தான் போகிறது; பார்க்கலாம்.
