PUBLISHED ON : ஜன 12, 2021

ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டில் அதன், ' ஏர்டேக்ஸ்' சாதனத்தை அறிமுகம் செய்துவிடும் என்கிறார்கள். கடந்த ஆண்டே வந்திருக்க வேண்டியது. ஆனால், ஏனோ தள்ளிப் போய்விட்டது. நம் பொருட்களில் இந்த 'ஏர்டேக்ஸ்' சாதனத்தை இணைத்துவிட்டால், ஜி.பி.எஸ்., மூலமாக, அந்த பொருள் எங்கே இருக்கிறது என்பதை நம்மால் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
மேலும், இதை பலவிதங்களில் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். பயணங்களின் போது நம் பர்சில், கைப்பைகளில், லக்கேஜுகளில் மாட்டிக்கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்களில் மாட்டிவிட்டால், அது எங்கே இருக்கிறது என்பதை பதற்ற மின்றி கண்டுகொள்ளலாம்.
ஏற்கனவே, 'டைல்' எனும் சாதனம் சந்தையில் இருக்கும் நிலையில், அதற்கு போட்டியாகவும் வேறு லெவலிலும் இந்த, 'ஏர்டெக்ஸ்' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம், மெய்நிகர் சாதன தயாரிப்பிலும் மும்முரமாக இருப்பதாகவும்; அது அடுத்த ஆண்டில் அறிமுகம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
