உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 17, 2022

அ நிறம் | அளவு
'வாட்ஸ்ஆப்' செயலில், கூடுதலாக பல வசதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஒரேசமயத்தில் 32 பேருடன் 'வாய்ஸ் கால்' வாயிலாக இணையும் வசதி, 2ஜி.பி., அளவிலான பைல்களை பகிர்ந்துகொள்ளும் வசதி என பல மிரட்டலான வாய்ப்புகளை வழங்க உள்ளது, வாட்ஸ்ஆப்.
குறிப்பிடத்தக்க வசதிகள்:
* வாட்ஸ் ஆப் குரூப் வாய்ஸ் காலில், 32 பேர் வரை கலந்து கொள்ளலாம். தற்போது அதிகபட்சம் 8 நபர்கள் வரை மட்டுமே கலந்து கொள்ள முடியும்
* 2 ஜி.பி., வரையிலான பைல்களை எளிதாக அனுப்பும், பெறும் வசதி
* 'கான்டாக்ட்' லிஸ்டில் இடம்பெறாத நபர்களுக்கும் உடனடியாக தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வசதி
* நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலான 'எமோஜி' படங்கள்
* குரூப்பில் பதிவிடும் தகவல்களை அட்மின் எந்த நேரத்திலும் நீக்கும் வசதி
இப்படி பல வசதிகள் அறிமுகம் ஆக உள்ளன.
