இனி ஸ்மார்ட் டிவியின் பெரிய திரையிலும் 'யுடியூப் ஷார்ட்ஸ்' வீடியோக்களை காணலாம்
இனி ஸ்மார்ட் டிவியின் பெரிய திரையிலும் 'யுடியூப் ஷார்ட்ஸ்' வீடியோக்களை காணலாம்
PUBLISHED ON : நவ 13, 2022

வெகு விரைவில், 'யுடியூப் ஷார்ட்ஸ்' வீடியோக்களை, ஸ்மார்ட் டிவியின் பெரிய திரையிலும் கண்டு களிக்கலாம்.
யுடியூப் நிறுவனம், குறுகிய கால அளவிலான, சிறு சிறு வீடியோக்களை, யுடியூப் ஷார்ட்ஸ் எனும் பெயரில் பகிர்ந்து வருகிறது.
இவற்றை, மொபைல்போன் உள்ளிட்ட சிறிய திரைகளில் மட்டுமே பார்க்க முடியும்.
இந்நிலையில், விரைவில் ஷார்ட்ஸ் வீடியோக்களை, ஸ்மார்ட் டிவியின் பெரிய திரைகளில் பார்க்கலாம் என, யுடியூப் அறிவித்துள்ளது.
செங்குத்தாக இருக்கும் இந்த ஷார்ட்ஸ் வீடியோக்களின் பேக்கிரவுண்டு, ஸ்மார்ட்டிவியில் வீடியோவின் பிரதான கலரை பொறுத்து அமைந்துகொள்ளும். மேலும், வீடியோவைச் சுற்றி வெள்ளை நிற பிரேமும் தோன்றும். விடியோவின் பக்கவாட்டில், வீடியோ குறித்த இதர தகவல்கள் தோன்றும்.
இருப்பினும், இதில் ஒரே ஒரு குறை உள்ளது. வழக்கமான யுடியூப் வீடியோக்களை பார்க்கும்போது, 'ஆட்டோ பிளே' தொழில்நுட்பத்தில், அடுத்தடுத்து வீடியோ 'பிளே' ஆகும். ஆனால், ஷார்ட்ஸ் வீடியோக்களை பொறுத்தவரை, அந்த வசதி இருக்காது.
வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த சேவை, 2019ம் ஆண்டு மற்றும் அதற்கு பின் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
