தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'ரிப்பேர்' ஆனால் அவ்வளவு தான்

'ரிப்பேர்' ஆனால் அவ்வளவு தான்

'ரிப்பேர்' ஆனால் அவ்வளவு தான்


PUBLISHED ON : நவ 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாமானியமாக பழுது பார்க்க முடியாத போன் என்றால், அதில் முதலிடம் பெறுவது, 'நத்திங் போன் 1' ஸ்மார்ட்போன் தான் என, பிரபல 'யுடியூபர்' ஹக் ஜெப்ரிஸ் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி; நடப்பு ஆண்டில், எந்தெந்த போன்களை பழுதுபார்ப்பதில் சிரமம் இருக்கிறது என்பதையும் பட்டியலிட்டு அறிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டில், சாமானியமாக பழுது பார்க்க முடியாத ஸ்மார்ட்போனாக, 'நத்திங் போன் 1' இருப்பதாக, கூறி, அதற்கு முதலிடத்தை வழங்குவதாக அறிவித்துஉள்ளார், ஹக் ஜெப்ரிஸ்.

நத்திங் போன் 1, ஒளிபுகும் வகையிலும், புதுமையான லைட்டிங் வசதியுடன் வந்துள்ளது அனைவரையும் கவர்வதாக இருந்தாலும்; இதை பழுது பார்ப்பது என்பது கடினமான ஒன்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கடுத்து, 'ஐபோன் 14 புரோ, ஐபோன் 14 புரோ மேக்ஸ்' ஆகிய போன்களையும், எளிதாக பழுது நீக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம், 'சாம்சங் கேலக்ஸி எஸ் 22' மற்றும் 'கூகுள் பிக்ஸல் 7' ஆகிய போன்கள் பழுதுநீக்கும் வாய்ப்பு அதிகம் கொண்டதாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுவாக, தொழில்நுட்பம் கூடக் கூட, அவற்றை பழுது நீக்குவதில் சிரமம் அதிகரித்துவிடுகிறது. இத்தகைய சாதனங்களில் பழுது ஏதேனும் ஏற்பட்டால், அதை துாரப் போட்டு விட்டு, வேறு ஒன்றை புதிதாக வாங்குவதை தவிர, வேறு வழியில்லாமல் இருக்கிறது.

நத்தின் போன் 1 டிஸ்ப்ளேவில் ஏதாவது சேதம் ஏற்பட்டு, அதை சரிசெய்தாலும், அல்லது டிஸ்ப்ளேவையே மாற்றினாலும் கூட, போனை மீண்டும் 'ரீகேலிபிரேஷன்' செய்வது சாதாரண விஷயம் இல்லை என எச்சரிக்கிறார், ஜெப்ரிஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us