PUBLISHED ON : அக் 30, 2022

வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான 'யு டியூப்' நிறுவனம், புதிய வடிவமைப்பு மற்றும் வசதிகளை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த புதிய வசதிகள் மற்றும் மேம்பாடுகள் 'மொபைல் போன், டெஸ்க்டாப், டிவி' என அனைத்திலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய மேம்பாடுகளின் காரணமாக, யுடியூபை பயன்படுத்துவது இன்னும் எளிமையானதாக இருக்கும் என்றும், பார்க்கும் அனுபவம் இன்னும் நன்றாக மெருகூட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.
வீடியோவின் 'விஷுவல் டைம்லைன்'ஐ பார்க்க வசதியாக, திரையை அழுத்தி நிறுத்தினாலே போதும் அல்லது மேல் நோக்கி 'ஸ்வைப்' செய்தாலே போதுமானது.
அதுமட்டுமின்றி, காட்சியை மிக எளிதாக 'ஜூம்' செய்து பார்க்க முடியும். இரண்டு விரலை பயன்படுத்தி, காட்சியை 'ஜூம் இன் அல்லது ஜூம் அவுட்' செய்து பார்க்க முடியும்.
'டார்க் மோடு' இன்னும் அதிகமாக 'டீப் டார்க்' மோடாக மாற்றப்படும்.
இதுபோல பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் சில வாரங்களில், இவை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
