/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பெண்களின் ஓவியம் வரைவது முக்கியமல்ல: அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தணும்!
/
பெண்களின் ஓவியம் வரைவது முக்கியமல்ல: அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தணும்!
பெண்களின் ஓவியம் வரைவது முக்கியமல்ல: அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தணும்!
பெண்களின் ஓவியம் வரைவது முக்கியமல்ல: அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தணும்!
ADDED : ஏப் 21, 2024 12:51 AM

''பெண்களின் உருவத்தை மட்டும் தீட்டுவது ஓவியமல்ல, அந்த ஓவியத்தில் அவர்களின் உள்ளுணர்வுகளும் வெளிப்பட வேண்டும்,'' என்கிறார் ஓவியர் பிரியா.
கும்பகோணத்தில் பிறந்தவர் ஓவியர் பிரியா. இப்போது சென்னையில் வசித்து வருகிறார். இளங்கலை ஓவியம் பயின்றுள்ள இவர் கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக ஓவியம் வரைவதை முழு நேர பணியாக செய்து வருகிறார்.
இந்தியா மற்றும் தென்னிந்திய அளவில் நடந்த, பல ஓவிய கண்காட்சிகளில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
இந்திய பாரம்பரியம் மற்றும் நவீன முறை ஓவியங்களை வரைந்து வரும் இவர், தனது படைப்புகளில் பெண்ணிய அழகியல் மற்றும் அவர்களின் உள்ளுணர்வு சார்ந்த கருத்துக்களை, மிக நுட்பமாக தனது ஓவியங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் பீளமேடு கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில் இவரது ஓவியக்கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்று இருந்த வாட்டர் கலர், அக்ரிலிக், ஆயில் பெயின்டிங்ஸ் மற்றும் பென்சில் ஸ்கெச் வகை ஓவியங்கள் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தன.
ஓவியர் பிரியாவிடம் பேசினோம்...
''நான் பிளஸ் 2 படிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. கணவர்தான் எனக்கு ஓவியம் வரைய கற்றுக்கொடுத்தார். அவர்தான் எனது குரு. பிறகு கல்லுாரியில் சேர்ந்து முறையாக படித்தேன்.
நான் ரியலிஸ்டிக் மற்றும் மார்டன் என, இரு வகையான ஓவியங்களையும் வரைகிறேன். பெண்ணியம் சார்ந்த ஓவியங்களை அதிகம் வரைகிறேன்.
பெண்களின் மகிழ்ச்சி, துயரம், வேட்கை, அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள் என, பெண் மனதின் பிம்பங்களை என் ஓவியங்களில் வெளிப்படுத்துகிறேன்,'' என்றார் பிரியா.
பிரபல ஓவியர் இளையராஜாவின் மனைவி இவர்!

