/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
இந்திய பொருளாதார வளர்ச்சியின் இன்ஜின் கிராமங்களா, நகரங்களா?
/
இந்திய பொருளாதார வளர்ச்சியின் இன்ஜின் கிராமங்களா, நகரங்களா?
இந்திய பொருளாதார வளர்ச்சியின் இன்ஜின் கிராமங்களா, நகரங்களா?
இந்திய பொருளாதார வளர்ச்சியின் இன்ஜின் கிராமங்களா, நகரங்களா?
ADDED : நவ 01, 2025 11:29 PM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம், டாதாகட்டா சட்டர்ஜி (Tathagata chatterji) எழுதிய, 'Citadels of Glass' என்ற ஆங்கில நுால் குறித்து, எழுத்தாளர் முருகவேல்  தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இந்த நுாலை எழுதியவர், ஒரு கட்டடக்கலைத்துறை பேராசிரியர். இந்தியாவில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய நகரங்கள் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை, ஆராய்ந்து, அதன் அடிப்படை விவரங்களை, இந்த நுாலில் எழுதி இருக்கிறார்.
இந்திய பொருளாதாரம், கிராமங்களை அடிப்படையாக கொண்டது என்பதுதான், அரசின் அடிப்படை கொள்கையாக இருந்து வந்தது. 1990ம் ஆண்டுக்கு பிறகு, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, நகரங்களே பொருளாதார வளர்ச்சியின் 'என்ஜின்கள்'  என்ற கருத்து, பொருளாதார நிபுணர்களால் முன்வைக்கப்பட்டது.
இந்த கால கட்டத்தில்தான் புதிய தொழில்கள் குறிப்பாக, ஐ.டி., நிறுவனங்களின் வருகை, வெளிநாட்டு முதலீடுகள், வெரைட்டியான ஆட்டோ மொபைல் நிறுவனங்கள், பார்மா கம்பெனிகள் என, பல தொழில் நிறுவனங்கள், இந்திய நகரங்களில் துவக்கப்படுகின்றன. இதனால் இந்தியாவில் உற்பத்தி அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட துவங்கி உள்ளது.
இந்த தொழில்களால் புறநகர் பகுதிகளில் புதிய நகரங்கள் உருவாகி, ஏற்கனவே இருந்த பழைய நகரங்களை விட, நவீன வசதிகள்  உள்ள 'சாட்டிலைட்' நகரங்களாக இன்றைக்கு மாறி உள்ளன.
வெளிநாடுகளில் உள்ள நகரங்கள் போல் கட்டடங்கள், சாலை வசதிகள் மற்றும் நகர கட்டமைப்புகள் இன்றைக்கு உள்ளன. அதிக வருவாய் தரும் நகரங்களாக உள்ளன.
பொருளாதார வல்லுநர்கள், இந்தியாவில் நகரங்களில் இருந்து,  60 சதவீதம் ஜி.டி.பி., கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். இனி இந்தியாவின் பொருளாதாரத்தை கிராமங்கள் தீர்மானிக்காது; நகரங்கள்தான் தீர்மானிக்கும் என்பதுதான், இன்றைக்கு உள்ள பொருளாதார நிலையாக உள்ளது என்பதுதான், இந்த நுாலின் மைய கருத்து.
இன்றைக்கு ஒவ்வொரு மாநிலத்திலும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெரிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் வழித்தடங்கள் என, பல கட்டமைப்புகள் நகரங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தொழில் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, உருவாக்கப்படும் இது போன்ற நகரங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன, அடிப்படை வசதிகள் எப்படி உள்ளது என்பது பற்றி, ஆய்வு நோக்கில் இந்த நுாலில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களின் கட்டுப்பாட்டில்தான் மற்ற நகரங்கள் செயல்படுகின்றன. இதை மாற்றி, நகரங்களை நிர்வகிக்கும் அதிகாரங்களை, மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களிடம் வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்பதை, இந்த நுால் விளக்குகிறது.  சிவில் இன்ஜினியர்கள் மற்றும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, பல தகவல்கள் இந்த நுாலில் உள்ளன.