தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/5,400 யூனிட் ரத்தம்... 349 ஜோடி கண்கள்! உயிர் காக்கும் 'மவுன' நாயகன்!

5,400 யூனிட் ரத்தம்... 349 ஜோடி கண்கள்! உயிர் காக்கும் 'மவுன' நாயகன்!

5,400 யூனிட் ரத்தம்... 349 ஜோடி கண்கள்! உயிர் காக்கும் 'மவுன' நாயகன்!


UPDATED : நவ 21, 2026 01:00 PM

ADDED : நவ 21, 2026 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 01:00 PM ADDED : நவ 21, 2026 12:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ‘‘பிறந்து மூன்று மாதமே ஆன ஒரு பிஞ்சுக்குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. மருத்துவமனையில் ரத்தம் கொடுத்து வெளியே வந்த போது, பிள்ளையை பெற்றவர்கள் ஓடி வந்து கண்ணீர் மல்க காலில் விழுந்த போது, அப்படியே ஒரு கணம் அதிர்ந்துவிட்டேன்’’

– இவ்வாறு மவுனசாமி பேசிய போது, கற்பனையிலும் அக்காட்சி மீண்டும் அரங்கேறியதை அவர் முகம் காட்டி கொடுத்தது.

இவர் ரத்த கொடையாளர்களுக்கான மாநில விருதுக்கு தேர்வாகியுள்ளார். சூலுார், கண்ணம்பாளையத்தை சேர்ந்த பாலதண்டாயுதம் ரத்ததான இயக்கத்தின் தலைவரும் கூட. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக, 40க்கும் மேற்பட்ட ரத்த தான முகாம் நடத்தி, 5,400 யூனிட் ரத்தம் தானமாக கிடைக்க காரண கர்த்தாவாக இருந்துள்ளார்.

பகத்சிங் கண்தான இயக்கம் மூலம் 349 ஜோடி கண்களை இறந்தவர்களிடம் இருந்து தானமாக பெற்று, மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.

‘‘நான் படித்தது வெறும் ஒன்பதாம் வகுப்பு தான். டாக்டருக்கு படித்து தான் உயிரை காப்பற்ற வேண்டுமென்பதில்லை. ரத்த தானம் செய்தும் அந்த மனநிறைவை பெறலாம். என்னை மாதிரியே எங்கள் பகுதியில் ரத்தம் தானமாக தருபவர்களை திரட்டி உருவாக்கிய அமைப்பு தான், பாலதண்டாயுதம் ரத்த தான இயக்கம்.

தற்போது நிறைய இளைஞர்களும் ரத்த தானம் செய்ய முன்வருகின்றனர். முகாம் நடத்தும் முன்பு துண்டு பிரசுரம் அடித்து வீடு வீடாக கொடுப்போம். எங்கள் அமைப்பில் இருந்த சிலர் புதிய ரத்த தான அமைப்புகளை துவங்கியுள்ளனர். இதற்கு, ஆரம்பப்புள்ளியாக இருந்ததில் சின்ன மனநிறைவு எப்போதும் உண்டு’’ என்றார்.

அதற்கு காரணமாக அவர் கூறியதுதான் சிந்திக்க வைத்தது.

‘‘மருத்துவ துறையில் எவ்வளவோ நவீன கண்டுபிடிப்புகள் வந்தாலும், ரத்தத்திற்கு மாற்றாக எதுவும் இல்லை. ரத்தத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உயிர்காக்கும் பொருளை, அடுத்தவருக்காக தருவது மகத்தான காரியமல்லவா...’’

இப்படி அவர் கூறியபோது கண்களும் சேர்ந்து பெருமிதத்துடன் சிரித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us