தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ ‘டிரெண்டிங்’ ஆகி வரும்  80’ஸ் 90’ஸ் பாடல்கள்

‘டிரெண்டிங்’ ஆகி வரும்  80’ஸ் 90’ஸ் பாடல்கள்

‘டிரெண்டிங்’ ஆகி வரும்  80’ஸ் 90’ஸ் பாடல்கள்


ADDED : ஆக 22, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 06:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘அப்பா... அந்த பாட்ட மாத்துப்பா’... என்ற காலம் போய், ‘என்னமா வரி எழுதிருக்காங்க பாரு!’ என்று பழைய பாடல் வரிகளை இன்றைய தலைமுறையினர் ரசிப்பது ஆச்சரியமளிக்கிறது.

காதல், பாசம், பிரிவு, ஏக்கம், மகிழ்ச்சி என ஒவ்வொரு மனநிலையையும் வெளிப்படுத்த 80ஸ், 90ஸ் காலத்து சினிமா பாடல்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் பதிவுகளில் இன்றைய ஜென் – சி இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் தங்களது அன்றைய மனநிலைக்கு ஏற்ற பாடல் வரிகளைத் தேடி பதிவிடுவது, ஜென்– சி இளைஞர்களிடையே புதிய டிரெண்டாக உருவாகியுள்ளது.

பெண்ணின் அழகை வர்ணிக்க, ‘பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி’, ‘கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ’ என்ற பாடல்கள், பாசத்துக்காக ஏங்கும் மனநிலையை, ‘என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்தி விட்டு போகும்’ போன்ற பாடல்கள் இளைஞர்களின் விருப்பமாகியுள்ளது. இப்படி பல பாடல்கள்.

இவற்றில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தற்போதைய மனநிலைக்கு ஏற்ப பாடல்களை தேர்வு செய்து மீண்டும் மீண்டும் கேட்கின்றனர். ஒரு தலைமுறையின் நினைவுகளாக இருந்த பாடல் வரிகள், அடுத்த தலைமுறையின் உணர்வுகளுக்கான ‘கேப்ஷன்களாக’ மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us