ADDED : ஆக 23, 2026 05:30 PM

த ங்கம் விலை ஏற்றம் தொடரும் நிலையில், டெரகோட்டா நகைகள் பெண்களின் பார்வையை இழுக்கிறது.
பாரம்பரியமான டெரகோட்டா களிமண் நகைகள், புதிய பேஷன் டிரெண்டாக மாறியுள்ளது. மண்ணை கையால் வடிவமைத்து தீயில் சுட்டு தயாரிக்கும் இந்த நகைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. வண்ணம் பூசி, கல் அலங்காரம் செய்து உற்பத்தி செய்யும் டெரகோட்டா நகைகள் வேகமான வரவேற்பு பெற்று வருவதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளாக இந்த நகைகளை, வெவ்வேறு டிசைன்களில் தயாரித்து வருகிறார் ஹரிணி ராஜேந்திரன். மக்கள் மனம் கேட்கும் வடிவங்களில் ஜிமிக்கி, நெக்லஸ், டாலர் செயின் என்று உருவாக்கி தருகிறார்.
தோடு வளையல் போன்ற எளிய வடிவங்களில் இருந்த டெரகோட்டா நகைகள் இப்போது பிரைடல், பேபி ஷவர், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்காகவும் தயார் ஆகின்றன.
குழந்தைகள் பிறந்தநாள் தீம்களில் அனிமேஷன் பட பாத்திரங்களை படைக்கிறார். தங்கம் அல்லது கவரிங் நகைகளால் சிலருக்கு ஏற்படும் அலர்ஜி பிரச்னை, டெரகோட்டாவில் கிடையாது என்கிறார்கள். இதனால் குழந்தைகள் கூட பயன்படுத்த முடியும்.
