sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

முதியவர்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் இளைய டாக்டர்

/

முதியவர்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் இளைய டாக்டர்

முதியவர்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் இளைய டாக்டர்

முதியவர்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் இளைய டாக்டர்


ADDED : ஜன 05, 2025 05:11 AM

Google News

ADDED : ஜன 05, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இவருக்கு வயது 35 மட்டுமே. இந்த இளைய வயதில் முதியோர் தொடர்பான உபாதைகளுக்கு 'ஸ்பெஷலிஸ்ட்' ஆகி, மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வீடு தேடி சென்று மருத்துவ சிகிச்சை பார்க்கிறார் டாக்டர் சுவாமிநாதன்.

இதற்காகவே மதுரை பொன்மேனியில் தனது சியாமளா ெஹல்த் கிளினிக்கில் ''டாக்டர் ஆன் வீல்ஸ்'' என்ற அமைப்பை அறக்கட்டளை மூலம் நடத்துகிறார். இதோ அவரது பேட்டி:

நான் எம்.பி.பி.எஸ்., மற்றும் முதியோர் (Geriatric) தொடர்பான முதுநிலை பட்டத்தை முடித்ததும் சில கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரிந்தேன். அப்போது மருத்துவமனைக்கு பிரச்னைகளுடன் வரும் முதியோர்களைப் பார்க்கும்போது மனது கஷ்டமாக இருக்கும். அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கே உடல் ஒத்துழைக்காது. அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதன் விளைவாக 2019ல் ஆரம்பித்தது தான் டாக்டர் ஆன் வீல்ஸ்.

கொரோனா காலத்திற்கு முன்பே அதை ஆரம்பித்ததால் கோவிட் காலத்தில் மட்டும் 700 முதியோருக்கு வீட்டுக்கே சென்று கொரோனாவை சரி செய்தேன். கடந்த 5 ஆண்டுகளில் 30 ஆயிரம் முதியோருக்கு வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்த்துள்ளேன்.

ஏழை முதியவர்களுக்கு இலவச மருத்துவம் தவிர, வசதி உள்ளவர்களிடம் நியாயமான கட்டணம் வாங்கிக்கொண்டு சிகிச்சை அளிக்கிறேன். இதுவரை 500 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி உள்ளேன்.

தினமும் அதிகாலை 2:00 மணிக்கு புறப்பட்டு, மதுரை நகரம், சுற்றி உள்ள திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் மதுரை வந்து காலை 9.30 மணிக்கு மருத்துவமனை பணியை ஆரம்பிப்பேன். ஒரு நாளைக்கு துாங்குவது 3 மணி நேரம் மட்டுமே.

அன்னை மீனாட்சி மீது அதிக பக்தி உண்டு. அதனால் தான் மீனாட்சி கோயில் பணியாளர்கள் யாராக இருந்தாலும் 50 சதவீத கட்டண சலுகையில் சிகிச்சை அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஸ்டாகிராமில் தனது பக்கத்திலும் மருத்துவ ஆலோசனைகளைக் கூறி ரீல்ஸ்கள் வெளியிட்டு வருகிறார்.

இவரை தொடர்புகொள்ள 70943 12185






      Dinamalar
      Follow us