sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 13, 2026 ,மார்கழி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

சேவைக்கு ஒரு ராம்குமார்

/

சேவைக்கு ஒரு ராம்குமார்

சேவைக்கு ஒரு ராம்குமார்

சேவைக்கு ஒரு ராம்குமார்

1


ADDED : ஜன 04, 2026 08:55 AM

Google News

ADDED : ஜன 04, 2026 08:55 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்றாட வாழ்க்கையில் நம்முடைய பிரச்னைகளை கூட நாமே தீர்க்க முடியாத நிலையில் மற்றவர் பிரச்னைகளை தம் பிரச்னையாக கருதி சரிசெய்து தீர்வு கண்டு சேவை செய்கிறார் மதுரை அருகே சோழவந்தானை சேர்ந்த ராம்குமார்.

அரசும், அதிகாரிகளும் தீர்க்க வேண்டிய பல பிரச்னைகளை தனது சொந்த முயற்சியிலும், செலவிலும் சரி செய்து வருகிறார். சமீபத்தில் கூட சோழவந்தான் மேம்பாலம் இறங்குமிடத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சொந்த செலவில் சரி செய்துள்ளார். இதுபோல மக்களின் கோரிக்கைகள், குறைகளை கேட்டறிந்து 24 மணி நேரத்தில் தீர்ப்பதற்கு முயன்று வருகிறார்.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவரிடம் பேசியதிலிருந்து....

அப்பா கண்ணாயிரம் பிள்ளை ஓய்வு பெற்ற சர்வேயர். அம்மா மகேஸ்வரி ஓய்வு பெற்ற ஆசிரியை. எம்.பி.ஏ., படித்துள்ளேன். 2012 ல் கல்லுாரி படிப்பை முடித்தவுடன் இயக்குனர் பாலச்சந்தரிடம் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றேன். சில படங்களிலும் நடித்துள்ளேன். எனது குடும்பம் அரசியல் ஈடுபாடு கொண்டது. எனவே சிறு வயது முதலே மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வம் இருந்தது. கல்லூரி காலங்களில் பஸ்சில் பயணம் செய்யும் போதும், அரசு அலுவலகங்களிலும் மக்கள் படும் கஷ்டங்கள் என் மனதை பாதித்தன. என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என அப்போது தோன்றியது.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே அங்குள்ளவர்களின் அடிப்படை பிரச்னைகள், வேலைவாய்ப்பு கோரிக்கைகளுக்கு உதவி செய்து வந்தேன். இதனால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேர்ந்ததால் வேலை பாதித்தது. இதனால் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான சோழவந்தானில் மயில் அழகன் 'ஆர்கானிக் புட்' எனும் பெயரில் நாட்டுப்பசு நெய், நாட்டுச்சர்க்கரை, கவுனிஅரிசி, மரச்செக்கு நல்லெண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை தொடங்கினேன். இதில் வரும் வருமானத்தில் தான் மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். இதுவரை யாரிடமும் சேவை செய்வதற்கு பணமோ, நன்கொடையோ பெற்றதில்லை. '

'ஹெல்பிங் ஹேன்ட் ராக்கர்ஸ்' எனும் 'வாட்ஸ்ஆப்' குழுவை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து வருகிறேன். எட்டு ஆண்டுகளாக முயற்சித்து, சோழவந்தானில் குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்வதற்காக புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கச் செய்தேன். 2022-ல் அப்போதைய போலீஸ் எஸ்.பி., மணிவண்ணன் என்னை அழைத்து பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கியது மகிழ்ச்சியான நினைவு.

ஓசூரில் இருந்து என்னிடம் கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தியது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். பலர் அரசியலில் ஈடுபட்டு சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் நான் சேவைகள் மூலம் மக்களையே சொத்தாக சேர்க்க விரும்புகிறேன். பெண்களை தொழில் முனைவோராக மாற்றி முன்னேற்றமடையச் செய்வதே எனது முக்கிய குறிக்கோள். ஆன்மிகம், ஜோதிடம் ஆகியவற்றில் அதீத நாட்டமுண்டு. அவற்றைக் கற்று பலருக்கு உதவி வருகிறேன்.

'ஊர் வம்பு உனக்கு எதற்கு' என சொந்த குடும்பத்தினரே எதிர்க்கின்றனர். அரசியல் ரீதியாகவும் பல எதிர்ப்புகள் உள்ளன. சிவபெருமானின் அருளால் இவற்றை சமாளிக்கிறேன் என்றார்.

இவரை வாழ்த்த 70100 25092






      Dinamalar
      Follow us