வெற்றி கொண்டாட்டத்தில் துவங்கி தோல்வியில் முடியும் போதை பழக்கம்
வெற்றி கொண்டாட்டத்தில் துவங்கி தோல்வியில் முடியும் போதை பழக்கம்
UPDATED : ஜூன் 27, 2026 03:50 PM
ADDED : ஜூன் 27, 2026 03:50 PM

எழுத்தாளர் அம்சப்பிரியா எழுதிய 'தளும்பும் வானம்' என்ற குறுநாவல் குறித்து, கவிஞர் செந்திரு தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
எழுத்தாளர் அம்சப்ரியா எழுதிய 'தளும்பும் வானம்' என்ற இந்த குறுநாவல், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படுவது தனி மனிதன் மட்டுமல்ல, அவனைச் சார்ந்துள்ள குடும்பமும், சமுதாயமும்தான் என்பதை விவரிக்கிறது.
வீட்டில் அப்பா குடிப்பழக்கத்திற்கு ஆளாகும்போது, அவருடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அவர்கள் சந்திக்கும் உளவியல் சிக்கல்களை, இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் வழியாக, நுாலாசிரியர் உருக்கமாக சித்தரித்து இருக்கிறார்.
குடிப்பழக்கத்தில் இருந்து, ஒருவரையாவது காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதல் இந்த நுாலை படித்து முடிப்பவர்களுக்கு ஏற்படுகிறது.
நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமாகவே வரும் இந்த பழக்கம், வெற்றிக் கொண்டாட்டங்களில் துவங்கி தோல்வியில் முடிகிறது.
ஒரு படைப்பு, வாசிப்போரின் மனசாட்சியைக் கேள்வி கேட்பதாக அமைய வேண்டும். அவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். அம்சப்ரியாவின் இந்த குறுநாவல், அப்படியான கேள்வியை நம் முன் வைக்கிறது.
போதை ஒரு வழிப்பாதையல்ல; மீண்டு வரலாம். அதற்கான வழியையும் இந்நுால் காட்டுகிறது.
