/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
தத்ரூப சிலைகளின் பின்னணியில் இருக்கிறார் ஒரு எம்.பி.ஏ., பட்டதாரி
/
தத்ரூப சிலைகளின் பின்னணியில் இருக்கிறார் ஒரு எம்.பி.ஏ., பட்டதாரி
தத்ரூப சிலைகளின் பின்னணியில் இருக்கிறார் ஒரு எம்.பி.ஏ., பட்டதாரி
தத்ரூப சிலைகளின் பின்னணியில் இருக்கிறார் ஒரு எம்.பி.ஏ., பட்டதாரி
ADDED : ஜன 18, 2026 05:21 AM

ஆ னைகட்டி ரோட்டில் காளையனூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, கம்பாலா போட்டி எருமைகள் சட்டென நம்மீது பாய்வது போன்ற உணர்வு.
சற்று நிதானித்துப் பார்த்தபோது சிலை எனப்புரிந்து ஆசுவாசம் அடைந்தோம். யானை, புத்தர், ஒட்டகம், ஜல்லிக்கட்டு காளை, குதிரை, சிம்மாசனம், தலைவர்கள் என விதவிதமான சிலைகள் பிரம்மாண்டாய் இருந்தன. 'சிலைகளம்' சிற்பிகளின் கைவண்ணத்தால் அவை உருவாகியிருந்தன.
'சிலைகள' சிற்பக்கூட உரிமையாளர் அருண் கார்த்திக்கிடம் பேசினோம்.
விவசாயக் குடும்ப பின்னணி. எம்.பி.ஏ., என்றபோதும் சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் பிடித்தம் இருந்தது. பாரம்பரிய கலையொன்றில் ஈடுபடும் அதே சமயம், பிடித்தமான தொழிலையும் செய்யலாம் என்பதால், சிலைகளை செய்ய முனைந்தேன்.
14 ஆண்டுகளாக இத்தொழிலில் இருக்கிறேன். களிமண், சிமென்ட், மார்பிள், கிரானைட் என அனைத்திலும் சிலைகள் செய்கிறோம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ஆயுட்காலம் குறைவென்பதால், பயன்படுத்துவதில்லை.
பைபரை பிரதானமாகக் கொண்டு செய்யும் சிலைகள் எடைகுறைவு. ஆயுள் அதிகம். 6 இஞ்ச் முதல் 100 அடி வரை செய்கிறோம். புடைப்புச் சிற்பம் போலுள்ள முரல் சிலைகள் முதல் முப்பரிமாண சிலைகள் வரை அனைத்தும் செய்கிறோம்.
பூங்காக்கள், ரிசார்ட்கள், வர்த்தக வளாகங்கள், திருமண மண்டபங்கள், செல்பி பாய்ன்ட்கள் என நிறைய வரவேற்பு உள்ளது. ஒரு போட்டோ கொடுத்தால், சிலை வடித்துத் தருகிறோம்.
மரகதபூங்கா திட்டத்தில் வனத்துறைக்கும், வனவிலங்கு சிலைகள், வனம் சார்ந்த கட்டமைப்புகளைச் செய்து தருகிறோம். திருத்தமான, நேர்த்தியான புத்தர் சிலைகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உள்ளது.
- சொல்லி முடித்தார் அருண் கார்த்திக்.

