UPDATED : ஆக 23, 2026 05:25 PM
ADDED : ஆக 22, 2026 02:00 PM

* வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருக்கும் இருவரில், ஒருவர் செலுத்த வேண்டிய கடனுக்கு, மற்றொருவரின் பணத்தை எடுக்க முடியுமா?
ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்போரில், ஒருவர் செலுத்த வேண்டிய கடனை வசூலிக்க, வங்கியானது தன்னிச்சையாக அந்த வங்கி கணக்கிலிருந்து மற்றொருவரின் பணத்தை எடுக்க முடியாது என்று, ஒடிஷா ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
* மைனர் சொத்தை அவரது பாதுகாவலர், கோர்ட் அனுமதியின்றி விற்பனை செய்ததை, ரத்து செய்ய கோரி வழக்கு தொடுக்கலாமா?
கோர்ட் முன் அனுமதியின்றி, ஒரு மைனரின் அசையா சொத்தை, அவரது பாதுகாவலர் விற்பது செல்லாது. ஏனென்றால் மைனர் வயதை கடந்த பிறகு அவர் மறுக்கலாம். அந்த மைனர் வழக்கு தாக்கல் செய்வது கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக மைனர் வழக்கு தொடுக்க தேவையில்லை.
- வக்கீல் ஆர்.சண்முகம், ரேஸ்கோர்ஸ்.
