/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கேன்சர் விழிப்புணர்வு நம்மூரில் குறைவு: தேனியை சேர்ந்த அமெரிக்க பல்கலை பேராசிரியை ஆதங்கம்
/
கேன்சர் விழிப்புணர்வு நம்மூரில் குறைவு: தேனியை சேர்ந்த அமெரிக்க பல்கலை பேராசிரியை ஆதங்கம்
கேன்சர் விழிப்புணர்வு நம்மூரில் குறைவு: தேனியை சேர்ந்த அமெரிக்க பல்கலை பேராசிரியை ஆதங்கம்
கேன்சர் விழிப்புணர்வு நம்மூரில் குறைவு: தேனியை சேர்ந்த அமெரிக்க பல்கலை பேராசிரியை ஆதங்கம்
ADDED : ஆக 11, 2024 11:48 AM

அமெரிக்காவில் எட்டு ஆண்டுகள் மருத்துவ மேற்படிப்பு முடித்து அங்குள்ள நெப்ராஸ்கா பல்கலை உதவி பேராசிரியராக இருக்கிறார் தேனியை சேர்ந்த டாக்டர் சினேகா. அண்மையில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு 'அறிவு பகிர்வு அமர்வு' என்ற தலைப்பில் மருத்துவ மேற்படிப்பு, ஆராய்ச்சி ஆலோசனை வழங்கி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இவரது பெற்றோர் இன்ஜினியர் ஆனந்தன், வனிதா.
சினேகா சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பை 2015ல் முடித்தார். 2017ல் அமெரிக்கா, டெக்சாஸ் பல்கலையில் எம்.டி. பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார். கொரோனா காலத்தில் இவரது ஆராய்ச்சி சேவையால் அதே பல்கலையில் அடுத்த 3 ஆண்டு படித்தார். ரத்தவியல், புற்று நோயியல் துறை ஆராய்ச்சியில் டாக்டர் ஆப் மெடிசன் பட்டம் பெற்றார். ரத்தப் புற்று நோய் சிகிச்சையில் அவர் செய்த ஆராய்ச்சியால் கலிபோர்னியா, ஸ்டான்போர்டு பல்கலையில் எலும்பு மஜ்ஜை மாற்றுமுறை உயர்தர பயிற்சியும் ஓராண்டு பெற்றார். இவரது தொடர் ஆராய்ச்சிகளால் அமெரிக்கா, நெப்ராஸ்கா மாநிலம், ஒமஹா பல்கலையில் ரத்த புற்றுநோயியல் துறை உதவி பேராசிரியராக உள்ளார்.
இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக கூறியதாவது:
புற்றுநோயை குணப்படுத்த தரமான மருத்துவம் உள்ள நிலையில் உரிய சிகிச்சை பெறாமல் ஏராளமான உயிரிழப்பு ஏற்படுகிறதே என கருதினேன். இத்துறையில் ஆராய்ச்சி செய்து பல உயிர்களை காப்பாற்றலாம் என கருதி புற்றுநோய் துறையில் மேற்படிப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு கேன்சர் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்டிற்கு 40 முதல் 50 லட்சம் பேர் கேன்சருடன் வாழ்கின்றனர். தற்போது உலகம் முழுவதும் இதற்கான பரிசோதனை முறை மேம்பட்டுள்ளது. ஆராய்ச்சிகளும் அதிகரித்து வருகிறது. இதய நோய், தொற்றுநோய்க்கு அடுத்து கேன்சரால் நிறைய பேரை இழக்கிறோம். இங்கு புகை பிடித்தல், பான், புகையிலை மெல்லுவது போன்ற பழக்கங்களால் நுரையீரல், வாய் புற்றுநோய் அதிகம். பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பபை வாய் புற்றுநோய் அதிகம். நம் நாட்டில் முன்கூட்டியே சென்று பரிசோதிக்க பெண்கள் தயங்குகின்றனர். இந்திய அரசு கர்ப்பபை வாய் புற்றுக்கு தடுப்பூசி கொண்டு வந்தும் அதனை செலுத்த தயங்குவது வேதனையாக உள்ளது.
அமெரிக்காவில் மார்பு, கர்ப்பவாய், வாய் புற்று நோய் மிக குறைவு. அமெரிக்காவில் 75 சதவீதம் பேர் கேன்சர் பரிசோதனை செய்கின்றனர். இந்தியாவில் 30 சதவீதம் பேர் தான் பரிசோதிக்கின்றனர். 500 பேரை அமெரிக்காவில் பரிசோதித்தால் 5 ஆண்டில் 50 பேர்தான் இறக்கின்றனர். இந்தியாவில் 50 சதவீதம் பேரைதான் காப்பாற்ற முடிகிறது. இதற்கு காரணம் சிகிச்சைக்கு தாமதமாக வருவது.
ரத்த புற்றுநோயில் 150 வகைகள் உள்ளன. பாதித்த அனைவரையும் காப்பாற்ற முடியாவிட்டால் கூட உரிய காலத்தில் சிகிச்சைக்கு வந்தால் நிறைய பேரின் வாழ்நாளை நீட்டிக்கலாம், சிலரை குணப்படுத்தலாம். உயிர் பிழைக்க முடியாதவர்களை சுகமாக வாழ்நாளை நீடிக்க சிகிச்சை உள்ளது.
நான் அமெரிக்காவில் இருந்து கொண்டே இங்குள்ள டாக்டர்களுடன் இணைந்து விர்ச்சுவல் கன்சல்டன்ட், ஆன் லைன் மூலம் பணியாற்ற விரும்புகிறேன். உரிய வாய்ப்பு வரும் போது இங்கேயே தங்கி சேவை செய்வேன்.
சர்க்கரை, இதய நோய் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வாழ்வது போல், சில ரத்த புற்றுநோய் உள்ளவர்கள் 20 ஆண்டுக்கு மேல் கூட மாத்திரை சாப்பிட்டு வாழலாம் என்றார்.
இவரை வாழ்த்த

