/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ள தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம்
/
ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ள தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம்
ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ள தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம்
ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ள தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம்
ADDED : ஆக 10, 2025 02:45 AM

கோ வை, காளப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகன். 'பாஸ் மெஷினரி' என்ற பெயரில் வேளாண் இயந்தி ரங்களை தயாரிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் உருவாக்கியுள்ள தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம், அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்த இயந்திரம் 2, 3 ஹெச்.பி., மோட்டார் திறனில் இயங்குகிறது. மணிக்கு 1,300 காய் உரிக்கிறது. எடை குறைவு. எந்த ஒரு பகுதிக்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். ஒரு தேங்காய் உரிக்க 10 பைசா தான் செலவாகும். சிறு, நடுத்தர, பெரிய விவசாயிகள், கொப்பரைத் தொழில், பெரிய ஓட்டல்கள், விடுதி நடத்துவோர், தேங்காய் வியாபாரிகள், எண்ணெய் நிறுவனங்கள் என பல தரப்பினருக்கும் பயன்படும்.
சண்முகன் கூறுகையில், ''வயதானவர்கள், பெண்களும் பயன்படுத்தலாம். கைகள், இயந்திரத்தில் சிக்கிக்கொள்ளும் என்ற பயம் இல்லை. எளிய தொழில்நுட்பம் என்பதால் பராமரிப்பு பற்றிய கவலை இல்லை. நாமே பராமரிக்கலாம். சந்தையில் உள்ள மற்ற தயாரிப்புகளில் உதிரி பாகங்கள் பழுது, தேய்மானத்தின்போது, முழுதாக மாற்ற வேண்டும்.
எங்கள் இயந்திரத்தில், தனித்தனியாக நீங்களே பொருத்தலாம். இதில் உள்ள ரப்பர் பகுதியை 50 ஆயிரம் முதல் 1 லட்சம் தேங்காய் உரித்த பின் மாற்றினால் போதும். பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, பிரேசில் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், ஏற்றுமதி செய்கிறேன்,” என்கிறார்.
தொடர்புக்கு: 86678 74536.