தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/இந்த மரத்தடியில் உட்கார கிரியேட்டிவ் ஐடியாக்கள்

இந்த மரத்தடியில் உட்கார கிரியேட்டிவ் ஐடியாக்கள்

இந்த மரத்தடியில் உட்கார கிரியேட்டிவ் ஐடியாக்கள்


UPDATED : ஆக 16, 2026 09:09 AM

ADDED : ஆக 16, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 09:09 AM ADDED : ஆக 16, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரத்தடி உரையாடலுக்கு ஒரு புதிய டிஜிட்டல் 'டச்' கொடுத்திருக்கிறார்கள், கோவையைச் சேர்ந்த 9 கிரியேட்டிவ் நண்பர்கள்.

இந்த கிரியேட்டிவ் உலகத்துக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் 'அண்டர் தி ட்ரீ'. இந்த 9 இளைஞர்கள் துவங்கி இருப்பது வெறும் அரட்டை அடிக்கும் இடம் அல்ல. 'நீங்க எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. கிரியேட்டிவ் எண்ணம் இருந்தால் போதும். அதை எங்களோடு பகிர நேரம் செலவிடலாம்' என்கின்றனர் இவர்கள்.

அண்டர் தி ட்ரீ புதிய மனிதர்கள், புதிய எண்ணங்கள், புதிய திறமைகளை ஒன்றிணைக்கும் கிரியேட்டிவ் குடும்பமாக மாறி வருகிறது. கோவையில் 2 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த சமூகத்தின் துவக்கம் ஒரு மாமரத்தடிதான். மாதம் ஒருமுறை ஒன்று கூடும் இவர்கள், ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கருத்தை உருவாக்கி அதை ஒரு நிகழ்ச்சியாக நடத்துகின்றனர்.

ஒவ்வொரு சந்திப்பும் ஒரு புதிய அனுபவத்தை தருகிறது. நிகழ்ச்சிக்குத் தேவையான பொருட்களை வாங்க மிகக் குறைந்த தொகை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. சந்திப்பில் யாரும், யாரையும் விமர்சிப்பதில்லை. தேவையில்லாத அறிவுரைகளும் இருக்காது. கிரியேட்டிவ் ஐடியாக்களுக்கு மட்டுமே இங்கு மதிப்பு.

தயக்கமின்றி பேசுவதற்கான நேரமும், இடமும் இங்கு கிடைக்கிறது. பல கிரியேட்டிவ் மனிதர்களை இணைக்கும் வலை பின்னலாக, அண்டர் தி ட்ரீ மாறி வருகிறது.

மரம் நிழல் கொடுக்கும். அண்டர் தி ட்ரீ கிரியேட்டிவ் மனிதர்களுக்கு ஒரு புதிய உலகத்தையே கொடுக்கிறது!

தொடர்புக்கு: 77080 90204.

- ச.பிரவீணா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us