சட்டம் அறிவோம் பகுதிக்கு காசோலை வழக்கில் குறைபாடு மனு தள்ளுபடி செய்ய முடியுமா?
சட்டம் அறிவோம் பகுதிக்கு காசோலை வழக்கில் குறைபாடு மனு தள்ளுபடி செய்ய முடியுமா?
ADDED : ஆக 15, 2026 07:00 PM

* காசோலை வழக்கில், புகார்தாரர் தாக்கல் செய்த மனுவில் குறைபாடு உள்ளது என்ற காரணத்திற்காக தள்ளுபடி செய்ய முடியுமா?
மாற்றுமுறை ஆவண சட்டத்தின் 138வது பிரிவின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட புகாரில் குறைபாடு இருந்த காரணத்திற்காக தள்ளுபடி செய்ய முடியாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குறைபாடு இருந்தால் விசாரணையின் போது அல்லது மேல் முறையீட்டு நிலையில் நிவர்த்தி செய்யக்கூடியது என்று தெரிவித்துள்ளது.
* தொழிற்தகராறு சட்டப்பிரிவு 17 பி ன் கீழ், ஒரு தொழிலாளி, ஓய்வு பெற்ற பிறகும் ஊதியத்திற்கு தகுதி பெறுவாரா?
1947 ம் ஆண்டு தொழிற்தகராறு சட்டப்பிரிவின் கீழ், ஒரு தொழிலாளிக்கு எதிரான மேல்முறையீடு நிலுவையில்இருக்கும் போது, அவர் கடைசியாக பெற்ற முழு ஊதியத்தையும் முதலாளி செலுத்த வேண்டும் என்று சட்டப்பிரிவு 17 பி கூறுகிறது. ஆனால், தொழிலாளி ஓய்வு வயதை அடைந்த பிறகு ஊதியம் பெற உரிமை இல்லை என்று ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
– வக்கீல் சண்முகம்,ரேஸ்கோர்ஸ்.
