sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் சொத்து பத்து கதர் சட்டை!

/

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் சொத்து பத்து கதர் சட்டை!

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் சொத்து பத்து கதர் சட்டை!

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் சொத்து பத்து கதர் சட்டை!

11


ADDED : டிச 22, 2024 01:04 PM

Google News

ADDED : டிச 22, 2024 01:04 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

19 வருடம் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றிய இவர் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதியுடன் பணியாற்றி உள்ளார். இவருடைய தந்தை கிருஷ்ணசாமிபாரதி, தாயார், தாய்மாமன், பெரியப்பா,பெரியம்மா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சுதந்திரத்திற்காக போராடி சிறை சென்றவர்கள். இவரும் இவரது சகோதரியும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள்.

லட்சுமிகாந்தன் பாரதி கூறியது: மதுரை துரை பொன்னுச்சாமி ஐய்யங்கார் பள்ளியில் தொடக்க கல்வி பயின்றேன். பட்டப்படிப்பு அமெரிக்கன் கல்லுாரி, பட்ட மேற்படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் முடித்து 1967ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பொறுப்பேற்றேன். அண்ணாதுரை முதல்வராக இருந்த போது மக்கள் குறைகளை தீர்க்கும் மனுநீதி திட்டம் கொண்டு வர ஆலோசனை கூறி அதனை செயல்வடிவம் ஆக்கினேன். கருணாநிதி முதல்வராக இருந்த போது தனி அதிகாரியாக இருந்தேன், மதுரையில் கலெக்டராக இருந்த போது வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தத்தளித்தனர்.

ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்கப்பட்டு மதுரை கரிமேடு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு குடியிருப்புகள் உருவாக நான் காரணமாக இருந்ததால் 'லட்சுமிகாந்தன் நகர்,' என பெயர் சூட்டினர்.

நேர்மையாகவும், எளிமையாகவும் இருப்பதை முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை பார்த்து கற்றுகொண்டேன்.

இவ்வாறு கூறினார்.

கலெக்டராக இருந்த போது கிடைத்த வருமானத்தை இலங்கையில் ஓம் பிரணவ ஆசிரமத்திற்கு வழங்கியுள்ளார். சென்னையில் மகன் வீட்டில் வசித்து வரும் இவர், மாதத்தில் பத்து நாட்கள் நயினாகரம் கிராமத்திற்கு சென்று தங்குவது வழக்கம். இவர் ஒரு ஆழ்ந்த தினமலர் வாசகர். கலெக்டராக பணியாற்றிய போதும் சரி, இப்போதும் சரி தினமும் காலையில் எழுந்த உடன் தினமலர் படித்த பின்புதான் மற்ற பணிகளை கவனிக்கிறார்.

ஆன்மிகத்தில் நாட்டமுடைய இவர் இன்றளவும் ஆரோக்கியத்துடன் வலம் வருகிறார். தினசரி நடைபயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை தவறாது கடைபிடிக்கிறார். எங்கு சென்றாலும் தனியாகவே செல்கிறார். உதவிக்கு என்று யாரையும் வைத்து கொள்வதில்லை.

தென்காசி மாவட்டம் நயினாகரத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் பாரதி. 99 வயதான முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் அண்மையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். காந்திய வாழ்க்கையை கடைபிடிக்கும் இவரது சொத்து பத்து கதர் சட்டை, பத்து பேன்ட், இரண்டு துண்டு மட்டுமே.






      Dinamalar
      Follow us