/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கார்டூன் கதாபாத்திரம் முதல் கலாம் 'வாய்ஸ்' வரை 'மிமிக்ரி' ஆர்டிஸ்ட் பால்மதி
/
கார்டூன் கதாபாத்திரம் முதல் கலாம் 'வாய்ஸ்' வரை 'மிமிக்ரி' ஆர்டிஸ்ட் பால்மதி
கார்டூன் கதாபாத்திரம் முதல் கலாம் 'வாய்ஸ்' வரை 'மிமிக்ரி' ஆர்டிஸ்ட் பால்மதி
கார்டூன் கதாபாத்திரம் முதல் கலாம் 'வாய்ஸ்' வரை 'மிமிக்ரி' ஆர்டிஸ்ட் பால்மதி
ADDED : நவ 10, 2024 10:27 AM

ஆண்கள் கோலோச்சும் 'மிமிக்ரி' கலையில், தனித்துவ அடையாளமாய் வலம் வந்து சாதித்துக்கொண்டிருக்கிறார் பெண் 'மிமிக்ரி ஆர்டிஸ்ட்' தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டியை சேர்ந்த பால்மதி என்ற நெல்லைமதி.
'கார்டூன்' கதாபாத்திரங்கள் முதல் அப்துல் கலாம் 'வாய்ஸ்' வரை தத்ரூபமாக மிமிக்ரி செய்யும் இவர் கூறியதாவது:
தந்தை துரைப்பாண்டி, தாய் பீடி சுற்றும் தொழில் செய்யும் செண்டுதேவி. இவர்களது கடைக்குட்டி சிங்கம் நான். அக்கா, 4 அண்ணன் உள்ளனர். இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். 9ம் வகுப்பு படிக்கும் போதே மேடையில் 'மிமிக்ரி' செய்து பழகினேன். வறுமையால் 2015ல் வேலை தேடி கோயம்புத்துாருக்கு வந்தேன். இங்கு ராணுவ பீரங்கி 'டேங்க்' தயாரிக்கும் கம்பெனியில் பிட்டர் பணி செய்கிறேன்.
விடுதியில் தங்கி பணிபுரிந்த போது நண்பர்கள், எனது மிமிக்ரியை உற்சாகப்படுத்தினர். மிமிக்ரி செய்து வீடியோ வெளியிட்டேன். வீட்டாரும் நான் 'மிமிக்ரி' செய்து வீடியோ வெளியிடுவதை விரும்பவில்லை. எதிர்ப்பை சமாளித்து புதுசு புதுசாய் 'மிமிக்ரி' செய்து பழக ஆரம்பித்தேன்.
மேடை நிகழ்ச்சிகளில் நடிகர்களின் 'வாய்ஸ்' மிமிக்ரி செய்து பார்வையாளர்களின் கைதட்டலை பெற்றேன். விருதுகளும் கிடைத்துள்ளன. எனது நெல்லை தமிழ் பேச்சு பார்வையாளர்களை அதிகரிக்க செய்தது. நடிகர் எம்.ஆர்.,ராதா, பருத்திவீரன் நடிகர் ராசு, சுஜிதா, மொட்டை ராஜேந்திரன், இயக்குனர்கள் கவுதம் மேனன், சிங்கம்புலி, நகைச்சுவை நடிகை தீபா, நடிகர்கள் மனோபாலா, வடிவேல், 'அந்நியன்' விக்ரம் குரலில் பேசியுள்ளேன். நடிகர் எம்.ஆர்.,ராதா 'வாய்ஸ்' எடுக்கத்தான் கஷ்டப்பட்டேன்.
குழந்தைகளை கவரும் நிஞ்சா கட்டோரி, டோரிமான், வருத்தப்படாத கரடி சங்கம் போன்ற குழந்தைகள் கார்டூன் படங்களில் வரும் குழந்தை, விலங்குகள் போன்று 'மிமிக்ரி' செய்வேன்.
திரைத்துறையில் காமெடி நடிகை, வில்லி நடிகையாக ஆசை. எனது முயற்சிகளுக்கு கணவர் ஆதரவு இருப்பது துாண்டுகோலாக உள்ளது. இன்னும் புதிய குரல்களில் பேசி மிமிக்கிரியில் சாதிக்க வேண்டும் என்றார்.