/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ஒற்றை சிலம்ப சாதனை நாயகன் தாத்தாவை மிஞ்சிய பேரன்
/
ஒற்றை சிலம்ப சாதனை நாயகன் தாத்தாவை மிஞ்சிய பேரன்
ADDED : ஜூலை 06, 2025 06:16 AM

அவரின் சாதனை குறித்து 'சண்டே ஸ்பெஷலுக்காக' கேட்ட போது:
நான் மதுரையில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எனது தாத்தா சேகர் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார். அவருக்கு தற்காப்பு கலைகள் மீது அதிக ஆர்வம். சிறுவயதில் அவரை பார்த்து வளர்ந்த எனக்கும் தற்காப்பு கலை மீது ஆர்வம் வந்தது.தாத்தாவிடம்சிறுவயதில் கற்றுகொண்டாலும்,சிலம்பத்தின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்ட பெற்றோர், கலை பண்பாட்டு துறையில் என்னை சேர்த்து விட்டனர். அங்கு என்னை போன்று பலர் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயின்று வருகின்றனர்.
எனது தாத்தாவை போல் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் எனது கனவு. அதற்கான பயிற்சியையும் தற்போது மேற்கொண்டு வருகிறேன். சிலம்பத்தில் தேசிய அளவில் சாதனை படைப்பவர்களுக்குகேலோ இந்தியா திட்டத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.சிலம்பத்தில்தேசிய அளவில் வெற்றி பெற்று விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டில் போலீஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற இலக்கில் தற்போது பயணிக்கிறேன்.
அதனால், சிலம்ப மாஸ்டர் மணிகண்டனிடம் தினமும் தனியாக பயிற்சி எடுக்கிறேன். குடும்பமும் பள்ளியும் எனது முயற்சிக்கு ஊக்கமளிப்பதால் தொடர்ந்து பயணிக்க முடிகிறது.ஒரு நாளைக்கு 3 மணி நேரம்சிலம்பம் சுற்றுவேன். அப்போது தான் ஏன் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைக்க கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
அதற்கான முயற்சியை கடந்த ஒரு ஆண்டாக மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றியது சாதனையாக உள்ளது. அந்த சாதனையை எட்ட வேண்டும் என்ற முயற்சியைகடந்த மே மாதம் மேற்கொண்டேன். மே 30 அதிகாலை 12:00மணிக்கு ஆரம்பித்து காலை 10:15 வரை (10 மணி நேரம் 15 நிமிடம்) ஒற்றை சிலம்பத்தை இடைவிடாமல்சுற்றி முடித்தேன்.எனது இந்த சாதனையை 'நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்', 'கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்', 'வர்ல்ட் வைட் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', 'விர்ட்யு புக் ஆப் ரெக்கார்ட்' ஆகியவை அங்கீகரித்துள்ளன. ஆரம்பத்தில் சிறு போட்டிகளில் கூட கலந்து கொண்டது இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்தது.
எனது அடுத்த கட்ட இலக்காக தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சாதிக்க வேண்டும் என்பது தான். தற்போது பத்தாம் வகுப்பு படிப்பதால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இருந்தாலும் தினமும் காலை, மாலை 40 நிமிடம் சிலம்பம் பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி பயிற்சி எடுத்து வருகிறேன் என்றார் கவின் சூர்யவர்தன்.