/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
அழகுக்கு அழகு சேர்க்கும் ஹேமமாலினி
/
அழகுக்கு அழகு சேர்க்கும் ஹேமமாலினி
ADDED : அக் 06, 2024 10:20 PM

அழகு, பேஷன் துறையில் இந்தியா குறிப்பிட்ட இடத்தை தக்க வைத்து கொண்டு வருகிறது. உலக அழகி போட்டிகளில் இந்திய பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். ஐஸ்வர்யா, சுஷ்மிதா சென், லாரா தத்தா என இவர்களின் எண்ணிக்கை தொடர்கிறது. திருமணமாகாத பெண்களுக்கு அழகி போட்டிகள் நடப்பது போல திருமணம் ஆன பெண்களுக்கும் அழகி போட்டிகள் நடப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சில ஆண்டுகளுக்கு முன் பல்கேரியாவில் நடந்த திருமணம் ஆன பெண்களுக்கான மிஸஸ் யுனிவர்ஸ் 2022 போட்டியில் வெற்றி பெற்றவர் டாக்டர் ேஹமமாலினி ரஜினிகாந்த்.
அதுமட்டுமின்றி அழகு மற்றும் பேஷன் துறையில் பங்கெடுக்க வரும் பெண்களுக்கு பயிற்சி அளித்து அழகி போட்டிகளுக்கு தயார் செய்து அனுப்பி வருகிறார்.
ஒவ்வொரு மாநில அளவிலும் அழகிபோட்டி நடத்த அமைப்புகள் உள்ளன. தமிழகத்தில் மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு இயக்குனராகவும் உள்ளார். சில நாட்களுக்கு முன் ஜெய்ப்பூரில் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் தமிழகம் சார்பில் லக் ஷிதா, புவனேஸ்வரி, திருநங்கை நமீதா பங்கேற்றனர். அவர்களுக்கு பயிற்சியளித்து அனுப்பியதில் ேஹமமாலினி பங்கு அளப்பரியது. இதற்காக மிஸ் இந்தியா போட்டிகளில் சிறந்த மாநில இயக்குனராக இவர் தேர்வு செய்யப்பட்டார். உலகம் முழுதும் அழகு கலை பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகளை நடத்துவதுடன் பங்கேற்றும் வருகிறார்.
அழகு மற்றும் பேஷன் துறையின் தற்போதைய போக்கு குறித்து தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக டாக்டர் ேஹமமாலினி ரஜினிகாந்த் பேசியதிலிருந்து...
தேனி மாவட்டம் போடி சொந்த ஊர். அப்பா பிசினஸ் மேன். அம்மா குடும்ப தலைவி. நான் டாக்டராக வேண்டும் என்பது பெற்றோர் விருப்பம். பள்ளி படிப்பை போடியில் முடித்தேன். உயர்கல்விக்காக சென்னையில் குடிபெயர்ந்தோம். பெற்றோர் விருப்பப்படி மருத்துவம் முடித்தேன். என் நிறம் குறித்த விமர்சனம் எழுந்ததுண்டு. அதையே சாதகமாக்கி சாதிக்க எண்ணம் எழுந்தது. இதனால் பேஷன் துறையை தேர்வு செய்தேன்.
மருத்துவத்தில் அழகுகலை மருத்துவராக பணி செய்து கொண்டே மிஸஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு போட்டியில் பங்கேற்க பயிற்சி மேற்கொண்டு வெற்றியும் பெற்றேன். தென்னிந்திய அளவிலான போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் மிஸஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றேன். இதன் மூலம் பல்கேரியாவில் ேஷாபியா நகரத்தில் 2022ல் நடந்த மிஸஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிட்டியது. இதில் 120 நாடுகளை சேர்ந்த 110 அழகிகள் பங்கேற்றனர். மூன்று கட்டங்களாக நடந்த போட்டியில் மிஸஸ் யுனிவர்ஸாக தேர்வானது மறக்க முடியாது.
பியா அகாடமி மூலம் டாக்டர்கள், டாக்டர்கள் அல்லாதோருக்கு மேக்கப், பியூட்டி கோர்ஸ்களை நடத்தி வருகிறேன்.
மாடலிங், ஆக்டிங் வரிசையில் புகழ் பெற விரும்பும் பெண்கள் பேஷன் துறைக்கு வருகின்றனர். பேஷன், அழகி போட்டிகள் மூன்று கட்டங்களாக நடத்தப்படும். ரேம்ப் வாக்கிங் போது 6 இன்ச் வரை உயரமுள்ள செருப்பு அணிந்து மிடுக்காக நடுவர்களை பார்த்தபடி நடந்து திரும்ப வேண்டும். இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கு சமயோசிதமான பதிலை உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற பல நுணுக்கங்கள் உள்ளன.
எந்த நிறமாக இருந்தாலும் அதுகுறித்த தாழ்வு மனப்பான்மை கூடாது. முகப்பொலிவுக்காக பிரபல நடிகைகள் என்னிடம் வருகின்றனர். மேக்அப், அதிக லைட் வெளிச்சம் போன்றவைகளால் அவர்களது ஸ்கின் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்கிறேன்.
எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு புகார்எழுகின்றன. பேஷன் துறையில் அழகு, கிளாமர் முக்கியம் என்பதால் இதுபோன்ற புகார்கள் எழுகின்றன. இந்த விவகாரத்தில் பெண்கள் 'நோ இஸ் நோ' என எந்த அட்ஜெஸ்மென்ட்டுக்கும் இடம் கொடுக்க கூடாது. இந்த விவகாரத்தில் தெளிவாக, உறுதியாக இருந்து திறமை, கடினமுயற்சி, விடா முயற்சி இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம்.
இவ்வாறு தெரிவித்தார்