sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

பழங்கால நடன மாஸ்டர் களை தேடி...

/

பழங்கால நடன மாஸ்டர் களை தேடி...

பழங்கால நடன மாஸ்டர் களை தேடி...

பழங்கால நடன மாஸ்டர் களை தேடி...


UPDATED : ஜன 21, 2024 03:37 PM

ADDED : ஜன 21, 2024 02:17 PM

Google News

UPDATED : ஜன 21, 2024 03:37 PM ADDED : ஜன 21, 2024 02:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நாக்க முக்க' பாடலுக்கு நடன இயக்கம் செய்து, தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பலரையும் ஆட வைத்து அதிர வைத்தவர் நடன இயக்குனர் ஸ்ரீதர். இவர் சமீபத்தில் பழங்கால நடன மாஸ்டர்களை கவுரவித்தது சினிமா, நடன ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

சென்னையை சேர்ந்த இவர் பி.காம். படிப்பை பாதியில் விட்டு விட்டு சினிமா வந்தார். 2001 முதல் பல்வேறு படங்களில் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்து 2006ல் கே.பாலச்சந்தர் இயக்கிய 'பொய்' திரைப்படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானார்.

அவர் கூறியதாவது; சினிமாவின் பழங்கால நடன குருக்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடத்தினேன். 1938ல் சினிமாவுக்குள் நடனம் எப்படி நுழைந்தது, அதில் இருந்து யார் யார் பெரிய டான்ஸ் மாஸ்டர்கள், அதற்கு பின் 1980 காலகட்டங்களில் நடன இயக்கம் எப்படி இருந்தது என்ற கேள்விகளை தேடி ஓடினேன். அதன் விடையாக பல கவனிக்கப்படாத நடன இயக்குனர்களை என்னால் காண முடிந்தது.

புதிய தலைமுறை பலருக்கு, முந்தைய தலைமுறை மாஸ்டர்களை தெரியவில்லை. தமிழ் சினிமா துவங்கிய காலக்கட்டத்தில் இருந்து தற்போது வரை 180 நடன மாஸ்டர்கள் உள்ளதை கண்டுபிடித்தேன். இவர்களை பற்றி வெளியே கூறவில்லை என்றால் இன்னும் நுாற்றாண்டு கழித்து இப்போது சிறந்து விளங்கும் யாரும் கூட தெரியாமல் போக வாய்ப்புள்ளது. எனவே நான் அவர்களை ஆவணப்படுத்த விரும்பினேன். அவர்களை அழைத்து கவுரவ விருது வழங்கினேன்.

Image 1221937

பழைய திரைப்படங்களில் நடன இயக்குனர் பெயர் போடும் வழக்கம் கிடையாது. பெரிய பெரிய ஹிட் பாடல்களுக்கெல்லாம் யார் நடன இயக்குனர் என்பதே தெரியாது. அப்படி மறைந்து வாழும் அவர்களை உயிரோடு இருக்கும் போதே கவுரவிக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அவர்கள் போட்ட வழித்தடத்தில் நாங்கள் பயணித்து வருகிறோம். இந்நிகழ்வில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று அவர்களை

வாழ்த்தினர்.

தற்போது புதிதாக இரண்டு படங்கள் நடித்துள்ளேன். விரைவில் வெளியாக உள்ளது. வில்லன் ரோல்கள் தான். மகள் அக் ஷதாவுடன் நடனமாடி ரீல்ஸ் செய்தது இன்ஸ்டாகிராமில் வைரலானது. பலருக்கும் பிடித்திருந்ததால் அடிக்கடி நடனமாடி ரீல்ஸ் வெளியிடுகிறோம். உங்களை பார்த்து நாங்களும் தந்தை-மகள் நடன ரீல்ஸ் செய்கிறோம் என பலர் பொதுவெளியில் பார்க்கும் போது கூறுகின்றனர். மகிழ்ச்சியாக உள்ளது.

ருத்ரன் படத்தில் 'ஜோர்த்தாலே' பாட்டு, மை டியர் பூதம் படத்தில் 'மாஸ்டர் ஓ மை மாஸ்டர்' பாட்டு டிரெண்ட் ஆகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்துள்ளன. நடிகர் விஜய்யின் தலைவா படத்தில் தமிழ் பசங்க பாடலில் கேமரா ஆங்கிளை மாற்றினேன். அதன் பிறகு கேமராவை மேலே துாக்கி நடிகர்களை ஆட செய்தேன். அது ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது.

புதிதாக நடன இயக்குனர்களாக வர விரும்புவர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்று தான். சினிமாவுக்கு கிரியேட்டிவிட்டி அத்தியாவசிய தேவை. நான் புது புது விஷயங்களை நடனத்தில் அறிமுகப்படுத்துவேன். கிரியேட்டிவிட்டி, புதிய விஷயங்களை கற்று கொள்ள எப்போதும் தயராக இருப்பது தான் முக்கியம். பொறுமையும் அவசியம் என்றார்.






      Dinamalar
      Follow us