தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/முதுமையில் துணை அவசியமா?

முதுமையில் துணை அவசியமா?

முதுமையில் துணை அவசியமா?


UPDATED : அக் 04, 2026 04:01 PM

ADDED : அக் 03, 2026 01:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 04:01 PM ADDED : அக் 03, 2026 01:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கையின் அந்திமக் காலத்தில், வாட்டி வதைக்கும் பெரும் சவால் தனிமைதான். துணையை இழந்தவர்களுக்கு முதுமையில் மறுமணமோ அல்லது ஒரு தோழமையோ தேவையா, அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன என்பது குறித்து, மனநல ஆலோசகர் டாக்டர் ஷாலினி பட்டீஸ்வரன் நம்மிடம் பகிர்ந்தவை:

முதியவர்களுக்கு மறுமணம் தேவை என்பதை, குழந்தைகளோ, உறவினர்களோ முடிவு செய்யக்கூடாது. வற்புறுத்தித் திருமணம் செய்து வைப்பது நல்லதல்ல. முதுமையில் இருவருக்குமே உடல்நலக் குறைபாடுகள், மற்றவரை கவனிப்பதில் வரம்புகள் இருக்கலாம். சம்பந்தப்பட்டவரே விரும்பி தனக்கு ஒரு துணை வேண்டும் என கேட்கும்போது, பிள்ளைகள் அதற்கு முழு ஆதரவு தர வேண்டும்.

இளமையில் தொடங்கும் திருமணத்தில் கனவுகளும், சாகசங்களும், சுற்றுலாக்களும் இருக்கும். ஆனால், முதுமையில் அமைதியான வாழ்வே முதன்மை.

மன அழுத்தத்தை பகிரும்போது காதுகொடுத்து கேட்க ஒரு துணை வேண்டும். உடல்நிலை சரியில்லாத போது, தனக்கென ஒரு ஜீவன் இருக்கிறது என்ற பாதுகாப்பு உணர்வு இதில் மேலோங்கும். இது அவர்களது வாழ்நாளை அர்த்தமுள்ளதாக்கி, சமூகத் தனிமையை போக்குகிறது.

முன்கூட்டியே கலந்தாலோசிக்க வேண்டியவை:

முதுமைக் காலத்தில் இணையும் தம்பதியர் வெறும் உணர்ச்சி வசப்படாமல், பின்வரும் விஷயங்களை முன்பே வெளிப்படையாகப் பேசிக்கொள்ள வேண்டும்.

* பராமரிப்பு: இருவரில் யாருக்காவது தீவிர உடல்நலக் குறைவு ஏற்பட்டால், யார் கவனிப்பது? அன்றாடச் செலவுகள், காப்பீடு, மாதாந்திர மருந்துச் செலவுகளை ஏற்பது பற்றி பேசுவது அவசியம்.

* வாரிசுரிமை: சொத்து யாருக்கு போய் சேர வேண்டும் என்பதில் தெளிவாக வேண்டும். இல்லாவிடில் பின்னாளில், பிள்ளைகளிடையே மனக்கசப்பு வெடிக்கலாம்.

* வாழ்க்கை முறை: எந்த வீட்டில் தங்குவது, யாருடைய குடும்ப பொறுப்புகளில், எவ்வளவு தலையிடுவது போன்றவற்றை முதலிலேயே முடிவு செய்ய வேண்டும்.

நகரத்து தனிமையும், ஆதரவும்!

கிராமங்களில் அண்டை வீட்டார், திண்ணைப் பேச்சு, டீக்கடை பெஞ்ச் என ஏதோ ஒரு சமூகத் தொடர்பு உயிர்ப்போடு இருக்கும். ஆனால், நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பணி ஓய்வுக்கு பின் ஒரே நாளில் வெளி உலக தொடர்பை இழந்து, நான்கு சுவர்களுக்குள் தீவிர தனிமைக்கு ஆளாகிறார்கள்.

இத்தகைய சூழலில் இருப்பவர்களுக்கு, மனமொத்த ஒரு துணை அமைவது அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையே உயர்த்தும்.

பெற்றோரின் ஓய்வுக்காலத்திற்கு தேவைப்படுவது வெறும் வேலைக்காரர் அல்ல; மனரீதியான ஆறுதல். போலி கவுரவம் பார்க்காமல், பெற்றோரின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பதே பிள்ளைகளின் கடமை.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us