தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/3 நிமிட வீடியோ... 20 மணி நேர உழைப்பு...

3 நிமிட வீடியோ... 20 மணி நேர உழைப்பு...

3 நிமிட வீடியோ... 20 மணி நேர உழைப்பு...


UPDATED : அக் 04, 2026 03:57 PM

ADDED : அக் 03, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 03:57 PM ADDED : அக் 03, 2026 04:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

3 நிமிட வீடியோ...

20 மணி நேர உழைப்பு...

'மன்னர் கால வரலாற்றை 'ஜென் சி' தலைமுறையினரிடம் சொன்னாலோ, பேசினாலோ 'பூமர் அங்கிள்' என முத்திரை குத்திவிடுவார்கள். ஆனால் ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் வரலாற்றை உயிருள்ள கதாபாத்திரங்களாக கொடுக்கும்போது அது வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்து விடுகிறது. அவர்கள் தந்த ஆதரவால் அடுத்த 'புராஜெக்ட்'டிற்கு செல்ல தயாராகி கொண்டிருக்கிறேன்' என உற்சாகமாக பேசுகிறார் 30 வயதான மனோஜ்முருகன்.

ஏற்கனவே 'கல்வெட்டு கதை சொல்லி'யாக அறியப்பட்ட இந்த தேனிக்காரர், வசிப்பதோ சோழர்கள் ஆண்ட தஞ்சாவூரில். அங்குள்ள பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் சோழர் மன்னர்களின் வாழ்க்கையை எடுத்துக்கூறியவர். கல்வெட்டுகளை படித்து அந்த கதாபாத்திரம் குறித்து சொல்லி வந்தவருக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் ஒரு 'ஐடியா' தோன்றியது. அதை அவரே சொல்கிறார்...

''இப்போதுள்ள சாட் ஜிடிபி, கெமினி போன்ற ஏ.ஐ., தொழில்நுட்ப செயலிகளால் புதுப்புது விஷயங்களை வியப்பாக பார்த்து ரசித்து வருகிறோம். அதை பயன்படுத்தி கல்வெட்டில் நாம் படித்ததை உயிருள்ள கதாபாத்திரங்களாக உருவாக்கக்கூடாது என யோசித்து கடந்த டிசம்பரில் முயற்சித்தேன். முதலில் என்னென்ன கதாபாத்திரங்கள் வரவேண்டும், அவர்கள் என்ன பேச வேண்டும், எந்த மாதிரியான உடைகள் அணிய வேண்டும் என ஒவ்வொன்றையும் நுணுக்கமாக யோசித்து அதற்கேற்ப கல்வெட்டு செய்திகளை அடிப்படையாக கொண்டு 'பிராம்ப்ட்' தயாரித்தேன். முதலில் 10 செகன்ட் வீடியோவாக உருவாக்கினேன். சின்ன சின்ன தவறுகள் ஏற்பட்டன. அதை மாற்றி மீண்டும் உருவாக்கினேன். அடுத்து அதை 3 நிமிட வீடியோவாக உருவாக்கினேன். இதற்கு 20 மணி நேரமானது. ஒவ்வொரு முறையும் 'பிராம்ப்ட்' உருவாக்கி அதை 10 செகன்ட் வீடியோக 'அப்டேட்' செய்தேன். இப்படி 10 செகன்ட் வீடியோக்களை எல்லாம் சேர்த்து எடிட் செய்து 3 நிமிட வீடியோவாக உருவாக்கினேன்.

அதை ஒரு 'எபிசோடாக' கொடுக்க எண்ணினேன். 'ராஜராஜ சோழனை தேடி' என்ற தலைப்பில் 3 நிமிட வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தேன். கல்வெட்டில் உள்ள கதாபாத்திரங்கள் மட்டும் இருந்தால் 'போரடித்து' விடும் என்பதால் அவர்களோடு நான் மதுரை 'ஸ்லாங்க்' பேசுவது போல் ஏ.ஐ.,யில் உருவாக்கினேன். அதாவது மன்னர் கால கதாபாத்திரங்களுடன் நான் பயணிப்பது, பேசுவது போல் காமெடியாக உருவாக்கினேன். இதுவரை 20 எபிசோடுகள் வந்துவிட்டன. இதற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

அந்த உற்சாகத்தில் மதுரையை ஆண்ட மாறவர்ம சுந்தர பாண்டியர் கால வரலாற்று செய்திகளை ஏ.ஐ., மூலம் மக்களிடம் கொண்டு செல்ல தயாராகி வருகிறேன். இந்த எபிசோடுகளை எல்லாம் சேர்த்து இரண்டரை மணி நேர 'வெப் சீரியல்' ஆக கொண்டு வரலாமா எனவும் யோசித்து வருகிறேன்'' என்ற மனோஜ் முருகனிடம், 'வருமானம் இல்லாமல் எப்படி இதை ஆர்வமுடன் செய்கிறீர்கள்' என கேட்டதற்கு, 'அடிக்கடி கல்வெட்டுகள் உள்ள இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச் சென்று வரலாற்றுசெய்திகளை கூறி வருகிறேன். அதன்மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு சமாளித்து வருகிறேன்' என்கிறார்.

இவரை வாழ்த்த 99522 77584

- ராம்ஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us