தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/சிங்கப்பூர் அருங்காட்சியகம் செல்லும் திருப்பூரில் உருவான 'கின்னாரம்'

சிங்கப்பூர் அருங்காட்சியகம் செல்லும் திருப்பூரில் உருவான 'கின்னாரம்'

சிங்கப்பூர் அருங்காட்சியகம் செல்லும் திருப்பூரில் உருவான 'கின்னாரம்'

1


UPDATED : நவ 22, 2026 04:07 AM

ADDED : நவ 21, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 04:07 AM ADDED : நவ 21, 2026 07:36 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: சிங்கப்பூர் தமிழர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்காக, திருப்பூரில், ஒற்றை நரம்பிசை கருவியான 'கின்னாரம்' என்ற இசைக்கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 55. வெண்கல பாத்திர உற்பத்தியாளர். அதிலுள்ள தன் அதீத ஆர்வம் காரணமாக கடந்த, 25 ஆண்டுகளாக மரச்சிற்பங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவ்வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இசை கலைஞர்களுக்கு உடுக்கை, கின்னாரம், வங்கப்பறை உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளை தயாரித்து வழங்கி வருகிறார். இதற்கிடையில், சிங்கப்பூர் தமிழர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்காக 'கின்னாரம்' இசைக்கருவி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து, மரச்சிற்ப கலைஞர் ஆனந்தன் கூறியதாவது:

ஒரு வகை சுரைக்காயை பயன்படுத்தி, ஒற்றை நரம்பிசை கருவியான 'கின்னாரம்' தயாரிப்பதில், பயிற்சி பெற்றேன். இந்த இசைக்கருவி, 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. சென்னை, தர்மபுரி உள்ளிட்ட தமிழகத்தின் நான்கு அருங்காட்சியகங்களில், நான் தயாரித்த கின்னாரம் இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது சிங்கப்பூர் தமிழர் அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக 'கின்னாரம்' தயாரிக்க கூறினர். இதனால், நான்கு நாட்களில் 'கின்னாரம்' தயாரித்துள்ளேன். திருப்பூரில் தயாரிக்கப்பட்ட இசைக்கருவி, கடல் கடந்து சென்று சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் இடம்பெறுவது பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us