தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/முள்ளுக்குள்ளும் மலரும் கணிதம் கற்றாழை மடலில் கற்கும் மழலைகள்

முள்ளுக்குள்ளும் மலரும் கணிதம் கற்றாழை மடலில் கற்கும் மழலைகள்

முள்ளுக்குள்ளும் மலரும் கணிதம் கற்றாழை மடலில் கற்கும் மழலைகள்


UPDATED : நவ 21, 2026 06:01 PM

ADDED : நவ 21, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 06:01 PM ADDED : நவ 21, 2026 05:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காகித நோட்டுகளும், பல வண்ணப் பேனாக்களும் இருந்தாலும், கற்றாழை மடலில் கணக்குப் போட்டு பயிற்சி செய்து இயற்கையோடு இணைந்த கற்றலை முன்னெடுத்துள்ளனர் காங்கயம் அருகே கல்லாங்காட்டுப்புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் தன்யா வர்ஷினி, தர்ஷன், ஹரிசுதன் ஆகியோர்.

பல குழந்தைகளுக்கு கணிதம் சுமையாகவும், சிலருக்கு பயத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆனால், கற்றாழை மடலின் சதைப்பற்றில் எண்களை கோர்த்து பயிற்சி செய்யும்போது, கணிதம் சுவாரசியமான விளையாட்டாக மாறுகிறது என்கிறார் இதற்கு வழிகாட்டிய வகுப்பாசிரியை மகேஸ்வரி.

இது குறித்து மகேஸ்வரி தனது எண்ணங்களை இவ்வாறு வடித்தார்...

வீணாகும் இயற்கை பொருட்களையும், சுற்றியுள்ள தாவர வளங்களையும் கற்றல் கருவிகளாக மாற்றும்போது, ‘இயற்கையிலிருந்தே கற்றல்’ என்ற கோட்பாடு நடைமுறைக்கு வருகிறது. அதேநேரத்தில், கற்றாழை போன்ற இயற்கைப் பொருட்களை அளவுக்கு அதிகமாகச் சேதப்படுத்தாமல், சுற்றுச்சூழல் சமநிலையைக் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுத்த முடிகிறது.

வழக்கமான மென்மையான காகிதத்தில் எழுதுவதைவிட, கற்றாழையின் ஈரப்பதமும் வித்தியாசமான அமைப்பும் கொண்ட பரப்பில் எழுதும்போது, குழந்தைகளின் தொடு உணர்வும் நுண் இயக்கத் திறனும் சுறுசுறுப்படைகின்றன. கற்றாழையின் நிறம், அமைப்பு, காலப்போக்கில் அது காய்ந்து மாறும் தன்மை ஆகியவற்றை நேரில் கவனிப்பதன் வாயிலாக, தாவரங்களின் கட்டமைப்பு, இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் குறித்த புரிதலும் குழந்தைகளுக்கு இயல்பாக ஏற்படுகிறது.

புதியதொரு சூழலில் கணக்குப் போடும்போது, குழந்தைகளின் கவனம் ஒருமுகப்படுகிறது. கணிதத்தின் மீதான தயக்கமும் விலகுகிறது. இயற்கையோடு இணைந்த கற்றல் குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் மீதான அக்கறையையும் பொறுப்புணர்வையும் வளர்க்கிறது. இந்த முயற்சிக்கு தலைமையாசிரியை சாவித்ரி, வட்டாரக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோரின் ஊக்கமும் பாராட்டும் இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது.

வழக்கமான மென்மையான காகிதத்தில் எழுதுவதைக் காட்டிலும், கற்றாழையின் ஈரப்பதமும் வித்தியாசமான அமைப்பும் கொண்ட பரப்பில் எழுதும்போது, குழந்தைகளின் தொடு உணர்வும் நுண் இயக்கத் திறனும் சுறுசுறுப்படைகின்றன


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us