sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

 லயத்துடன் லலிதா ரஜினி, கமல் பாராட்டிய நடிகை

/

 லயத்துடன் லலிதா ரஜினி, கமல் பாராட்டிய நடிகை

 லயத்துடன் லலிதா ரஜினி, கமல் பாராட்டிய நடிகை

 லயத்துடன் லலிதா ரஜினி, கமல் பாராட்டிய நடிகை


ADDED : நவ 30, 2025 07:06 AM

Google News

ADDED : நவ 30, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரதத்தின் பண்பாடு, பாரம்பரியத்தை பறைசாற்றும் கலைகளில் பரதக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. பரதக்கலையை கற்றதுடன், இளைய தலைமுறையினரும் கற்று கொள்ள தனியாக பரதநாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார்; வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிநடத்தி வருகிறார்.

வழுதுார்பாணி ஸ்டைலில் பரத நாட்டிய கலையில் அசத்தி வரும் இவர் டிவி 'பி கிளாஸ்' பரதநாட்டிய கலைஞராக திகழ்கிறார். நடிகர் ஓய்.ஜி.மகேந்திராவுடன் இணைந்து சாருகேசி உள்ளிட்ட நாடகங்களிலும் நடித்து வரும் இவர் சினிமாவிலும் தலைகாட்டியுள்ளார். நாட்டிய போட்டி நடுவராகவும் திகழ்கிறார். நாட்டிய திலகம் உள்ளிட்ட விருதுகள் இவரை பெருமைபடுத்தியுள்ளன. இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரர் பரதநாட்டிய கலைஞர் முனைவர் லலிதா.

இந்த சாதனைகள் எப்படி சாத்தியமாயிற்று என தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பேசியதிலிருந்து...

சென்னை பிறந்து, வளர்ந்த ஊர். திருவல்லிக்கேணி ஸ்ரீசரஸ்வதி கான நிலையம், ரங்கநாயகி ஜெயராமனை இயக்குனராக கொண்டு செயல்பட்டது. அங்கு பத்மினி கிருஷ்ணமூர்த்தியிடம் ஐந்து வயதில் பரதம் கற்கதுவங்கினேன்.

பிளஸ் 2 படித்த போது ராணி சீதை அரங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம் 1999ல் நடந்தது. ரங்கநாயகி ஜெயராமனிடம் பரதம் குறித்து மேலும் பயிற்சி பெற்றேன். பத்மலட்சுமி சுரேஷ் குழுவில் இணைந்து பரதத்தில் பல நுணுக்கங்களை கற்று நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க துவங்கினேன். சிதம்பரகுறிச்சி என்ற நாட்டிய நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பத்மலட்சுமியுடன் இணைந்து பங்கேற்றது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

பிறகு லட்சுமிராமசாமியிடம் நட்டுவாங்கம், தியரி கற்று கொண்டேன். பரதத்தில் 'பாவங்களை' 'மெச்சூர்டு' ஆக செய்ய பயிற்சியும் அளித்தார்.

பரதத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றேன். பிறகு லட்சுமிராமசாமி அளித்த ஊக்கத்தின்பேரில் அண்ணாமலை பல்கலையில் டாக்டர் சித்ராவை கைடாக கொண்டு பரதநாட்டியத்தில் பி.எச்.டி., முடித்தேன்.

மறுபுறம் ஐ.சி.டபிள்யூ., கோர்ஸ் சேர்ந்து 2009ல் முடித்தேன். சில தனியார் நிறுவனங்களில் பைனான்ஸ் மேனேஜராக பணிபுரிந்து கொண்டே பரதநாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன். 12 ஆண்டு தனியார் நிறுவன பணியை முடித்து ஒரு அகாடமி துவங்கி மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறேன்.

நாட்டியஸ்மிருதி என்ற நாட்டிய பள்ளியை துவக்கி பரத நாட்டிய கலையையும் கற்று கொடுக்கிறேன். பரதநாட்டியத்தில் காரணாஸ் உள்ளிட்டவைகளை டாக்டர் சுஜாதாமோகனிடம் கற்றுகொண்டேன்.

ஓய்.ஜி.மகேந்திரனின் 'சாருகேசி' நாடகத்தை காண வந்த நடிகர் ரஜினி, நடித்த நடிகர்களுக்கு அவரது வீட்டில் விருந்து அளித்தார். அப்போது என் நடிப்பு நன்றாக இருந்ததாக பாராட்டியதை மறக்க முடியாது. நடிகர் கமலும் நாடகத்தை பார்த்து என்னை அழைத்து பாராட்டினார்.

சாருகேசி நாடகம் 40 முறை அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்திலும் நான் நடித்துள்ளேன். வீணை பாலா, பிரகாஷ்குட்டியின் பொன்னியின் செல்வன், நாடக ஆளுமை விவேக் சங்கரின் நாடகங்களில் நடித்திருக்கிறேன்.

நடிகர் யூகிசேது நடித்த ஒரு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. பரதகலை மீதான ஈர்ப்பால் சினிமாவில் கவனம் செலுத்தவில்லை.

ஜூவல்லரி கிராப்ட் செய்வது பிடிக்கும். நாடகங்களில் நான் தயாரிக்கும் ஜூவல்லரி இடம் பெற செய்கிறேன். பெயின்டிங்கும் வரைவேன். முறையாக பயிற்சியும் எடுத்திருக்கிறேன்.

மஸ்கட், சிங்கப்பூர், துபாய் நாடுகளில் நாட்டியம், நாடகங்களில் பங்கேற்க வாய்ப்பு கிட்டியது. பரதகலையையும், நாடக கலையையும் வரும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் லட்சியம் என்றார் நம்பிக்கையுடன்.






      Dinamalar
      Follow us